க்களின் காணிகள் மக்களுக்கே எனக் கூறும் ஜனாதிபதி அநுர குமாரத்திசாநாயக்க ஏன் எமது காணிகளை விடவில்லை என பொதுமகன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மயிலிட்டியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இடம்பெறும் காணி விடுவிப்புக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் செய்த கர்மா வினை அவர்களின் அரசாங்கத்தை இல்லாமல் செய்தது.
அதேபோல் அநுர அரசாங்கமும் மக்களை துன்பப்படும் வகையில் மேற்கொள்ளும் எந்த ஒரு கர்ம வினையும் அவர்களின் அரசாங்கத்தை நிலைகுலைய வைக்கும்.
நாங்கள் அரசாங்கத்திடம் வாழ்வதற்கு பணம் கேட்கவில்லை எமது சொந்த பணத்தில் வாங்கிய காணியை இராணுவ பிடிக்குள் இருந்து மீட்டுத்தருமாறு கோருகிறோம்.
ஆகவே மகிந்த அரசாங்கத்துக்கு நடந்த கர்ம வினையை நினைவில் கொண்டு மக்களின் காணிகள் மக்களுக்கு என வாக்குறுதி வழங்கியபடி எமது காணிகளை விரைவாக விடுவித்துத் தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.