நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் கௌரவ T.P.சரத், யாழ்ப்பாணம் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இளங்குமரன், கிளிநொச்சி மாவட்ட Clean srilanka திட்டத்தின் தலைவர் மோகன், கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள்,பிரதி மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் இணைப்பாளர்,பிரதேச சபை உறுப்பினர்கள்,மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.
இந்த வருடத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 181 வீடுகள் வழங்கப்பட்டன.அவற்றில் அண்ணளவாக 100 வீடுகளிற்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்தவகையில்
கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 35 பயனாளிகளுக்கான காசோலைகள் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன