கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை (04) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 250 கிராம் 510 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.