பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை தாக்கிய ஆண்கள்; யாழ்.போதனா வைத்தியசாலையில் சம்பவம்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை தாக்கி, காணொளி பதிவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

போதனா வைத்தியசாலைக்கு நேற்றையதினம்(28.07.2026) மாலை யுவதியொருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில், குடும்பத்தினரால் அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

நோய்வாய்ப்பட்ட யுவதியுடன், யுவதியின் தாய் உள்ளிட்ட இரு பெண்களும், 5 ஆண்களும் வைத்தியசாலைக்கு வந்திருந்த நிலையில், அவர்களும் அவசர சிகிச்சை பிரிவின் வாயிலில் பகுதியில் குழுமி இருந்துள்ளனர்.

அதன்போது அங்கு கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர், யுவதியின் தாயாரை தவிர ஏனையோரை அங்கிருந்து செல்லுமாறு பணித்துள்ளார்.

இந்நிலையில், அங்கிருந்தவர்கள் யுவதியுடன் முரண்பட்டு அதனை தமது தொலைபேசியில் காணொளியையும் பதிவு செய்துள்ளனர்.

அதற்கு பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் எதிர்ப்பு தெரிவித்த போது பாதுகாப்பு உத்தியோகஸ்தரை ஒருவர் அவரை தாக்கியுள்ளார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இது தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் வைத்தியசாலை பணிப்பாளருக்கு அறிவித்ததுடன் , தனது பாதுகாப்பு சேவை நிறுவனத்திற்கும் அறிவித்த நிலையில் , அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , சம்பவத்துடன் தொடர்புடைய ஆண்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

jud

மருத்துவமனைக்கு அபராதம்

July 29, 2026

அனுமதிக்கப்பட்ட உச்சவரம்பை மீறி இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு வவுனியா நீதிமன்றம் 5 இலட்சம் ரூபாய்

f

தனியார்மயமாகிறது FIFA உலகக் கோப்பை?

July 29, 2026

ஃபிபா (FIFA) தலைவர் ஜியானி இன்பான்டினோ, உலகக் கோப்பைப் போட்டிகளில் கணிசமான பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்கள் வாங்குவதற்கு வழிவகை செய்யும்

an

மனிதாபிமான அடிப்படையில் சிவராசா அனோஜனை விடுவிக்குமாறு கோரிக்கை

July 29, 2026

மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த

hum

மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி

July 29, 2026

சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்ட மூதூர் படுகொலை இடம்பெற்று 20 வருடங்கள் கடந்துள்ள போதிலும்,

Accident

திருக்கோவிலில் விபத்து; பெண் ஒருவர் உயிரிழப்பு!

July 29, 2026

திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், இரு சிறுவர்கள் உட்பட

us

அமெரிக்காவும், சவூதியும் இணைந்து ஈராக்கில் தாக்குதல்

July 29, 2026

மத்திய கிழக்கு மோதலின் ஒரு சாத்தியமான தீவிர போக்காக, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய குழுக்கள் மீது

toro poli

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் குழந்தைகளைக் கவர முயன்ற 57 வயது தொராண்டோ நபர் – குற்றச்சாட்டுகள்

July 29, 2026

Snapchat, TikTok மற்றும் Fortnite ஆகிய செயலிகளைப் பயன்படுத்தி கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரித்தானியாவில் உள்ள குறைந்தபட்சம் 15

WILD FIRE

வடக்கு ஒன்ராறியோவில் காட்டுத் தீயை மூட்டிய கியூபெக் நபர் மீது குற்றச்சாட்டு

July 29, 2026

வடக்கு ஒன்ராறியோ சமூகமான ஹுரோன் ஷோர்ஸில் (Huron Shores) இந்த வாரம் இடம்பெற்ற தொடர்ச்சியான காட்டுத் தீ விபத்துகள் குறித்து

HNEVLLPEGBEWHABKFIAESZOSVM

மொன்றியல் விமான நிலையத்தில் வண்ணம் பூசியதால் ஏற்பட்ட துர்நாற்றம்: அமெரிக்காவிற்கான விமானங்கள் ரத்து

July 29, 2026

மொன்றியல்-பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் (Montréal-Pierre Elliott Trudeau International Airport) செய்யப்பட்ட “உட்புற வண்ணம் பூசும்

8

கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தினால் குண்டர் சட்டம் பாயும்: மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை!

July 29, 2026

கன்னியாகுமரி: கேரளாவுக்குத் தடையை மீறி கனிம வளங்களைக் கொண்டு செல்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்றும், அந்த

EEZ4KO6XDFDSLL4MIMTCNZKYBM

17 ஆண்டுகளுக்கு முன்பு மகன்களைக் கடத்தி போலந்துக்குத் தப்பிச் சென்ற நியூமார்க்கெட் பெண் விசாரணையை எதிர்கொள்கிறா

July 29, 2026

17 ஆண்டுகளுக்கு முன்பு தனது சிறுவயது மகன்களை அவர்களின் தந்தையிடமிருந்து கடத்தி போலந்துக்கு அழைத்துச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நியூமார்க்கெட்

7

சென்னை மெட்ரோ பணிகளை ஆய்வு செய்த முதல்வர் விஜய் – பொதுமக்களுடன் ரயிலில் பயணம்!

July 29, 2026

சென்னை: தலைநகர் சென்னையில் தீவிரமாக நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்