பிள்ளையானுக்குப் பிணை கோரி மனு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அன்றைய தினம் இந்தப் பிணைக் கோரிக்கை தொடர்பில் விடயங்களை முன்வைக்குமாறு அறிவித்து, சட்டமா அதிபருக்கு அழைப்பாணை விடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான பி. குமாரன் ரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மனுதாரரான பிள்ளையான் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர த சில்வா நீதிமன்றில் விடயங்களை முன்வைத்துத் தெரிவிக்கையில், தமது சேவை பெறுநர் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார் எனக் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், ஓராண்டு தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கூறினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஒரு நபர் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் கடந்துவிட்ட நிலையில், அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் பிணைக் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்கான அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய, தமது சேவை பெறுநரைப் பிணையில் விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி, நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

எவ்வாறாயினும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் திருத்தப்பட வேண்டும் எனச் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய, உரிய திருத்தங்களை மேற்கொண்டு திருத்தப்பட்ட மனுவொன்றைச் சமர்ப்பிப்பதற்கு மனுதாரர் தரப்பு இணக்கம் தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து, இந்த மனு தொடர்பில் ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் ,சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.

cour

யாழ் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை

November 21, 2026

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக,

satti

சாட்டி மாவீரர் துயிலுமில்ல வழக்கில் தீர்வு

November 21, 2026

டை செய்யப்பட்ட அமைப்புகளின் அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ காட்சிப்படுத்தாது உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் உரிமை மக்களுக்கு உண்டு எனச் சுட்டிக்காட்டியுள்ள ஊர்காவற்றுறை

jos sta

வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வில்லை; 30 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பு

November 21, 2026

2027 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினை புறக்கணிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 30

nin

நிந்தவூர் கடற்கரையில் நீராடச் சென்ற மாணவரும் காப்பாற்றச் சென்ற நபரும் மாயம்

November 21, 2026

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் நேற்று(20) மதியம் கடலில் நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில்,

pillai

பிள்ளையானுக்குப் பிணை கோரி மனு

November 21, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்

ha

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் குழு பிரதமர் சந்திப்பு

November 21, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche உள்ளிட்ட தூதுக்குழுவினர் நவம்பர் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி

bu

Builders Gateway நிர்மாணத்துறை வசதியளித்தல் பிரிவு திறந்து வைப்பு

November 21, 2026

அரச நிர்மாணத்துறை பணிகளின் போது தனியார் நிறுவனங்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இடையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, தடைகளை நீக்கி

WhatsApp Image 2026-11-21 at 06.49.57

தமிழீழத் தேசியக்கொடி நாள்; மாவீரர் வார ஆரம்ப நிகழ்வு 2026

November 21, 2026

மிசிசாகா நகர மேயர் Alvin Tedjo மற்றும் முக்கிய அரச பிரமுகர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்வு! இன்று நவம்பர் 21ஆம்

Parl

இரண்டாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

November 20, 2026

​​ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம்

images

வடக்கின் சிறந்த பிரதிநிதியாக சிவாஜிலிங்கம் திகழ்ந்தார் – NSSP மற்றும் USP இரங்கல்

November 20, 2026

தமிழ் மக்களின் விடுதலை அபிலாசைகளை நனவாக்கும் முயற்சிகளில், தெற்கின் ஜனநாயக சக்திகள் மற்றும் உழைக்கும் வர்க்க இயக்கங்களுடன் இணைந்து தொடர்ந்து

keth

கீதாஞ்சலிக்கு விளக்கமறியல் நீடிப்பு

November 20, 2026

கொழும்பு கோட்டை டிரான்ஸ்வேர்க்ஸ் சதுக்கக் காணியை கிரிஷ் நிறுவனத்திற்குக் குத்தகைக்கு வழங்கும் கொடுக்கல் வாங்கலில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு

thada

274 மீன்பிடி வலைகளுடன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது

November 20, 2026

இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வியாழக்கிழமை (19.11.2026) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்