திங்கள்கிழமை நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் வாக்காளர்களின் பெருவாரியான ஆதரவுடன் பேட்ரிக் பிரவுன் (Patrick Brown) பிராம்ப்டனின் மேயராக மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
தற்போதைய மேயரான பேட்ரிக் பிரவுன், திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பிராம்ப்டன் மேயர் தேர்தலில் எளிதான வெற்றியைப் பெற்றார்.
தற்போதைய மேயரை வீழ்த்த 11 வேட்பாளர்கள் களமிறங்கிய போதிலும், இரவு 9:20 மணி நிலவரப்படி 164 வாக்குப்பதிவு மையங்களில் 134 மையங்களின் முடிவுகள் வெளியான போது, பிரவுன் 55 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் 61,038 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
முன்னதாக 2018 ஆம் ஆண்டு மேயர் தேர்தலில் போட்டியிட்ட வெஸ்லி ஜாக்சன் (Wesley Jackson), அந்த நேரத்தில் 21 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்று (21,934 வாக்குகள்) இரண்டாமிடத்தைப் பிடித்தார். பிரப் கில் (Prabh Gill) 12 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளுடன் (13,079 வாக்குகள்) மூன்றாம் இடத்தைப் பிடித்தார். களத்தில் இருந்த மற்ற ஒன்பது வேட்பாளர்களில் எவரும் ஐந்து சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறவில்லை