ரியளவான போதைப்பொருள் கடத்தல்காரரும், பாதாள உலககுழு உறுப்பினர் என அறியப்படும் கரந்தெனிய சுத்தாவின் எதிரித் தரப்பு முக்கியஸ்தர் ஒருவரைப் படுகொலை செய்யத் திட்டமிட்டிருந்த 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவலுக்கமைய நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 109 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரும், பாரியளவான போதைப்பொருள் கடத்தல் காரரும் பாதாள உலகக்குழு உறுப்பினர் என அறியப்படும் சோபன ஹந்தி ஜயலத் டி சில்வா எனும் கரந்தெனிய சுத்தாவின், சகோதரரான ராஜு’ எனும் சனத் டி சில்வா என்பவருக்கு சொந்தமான மீட்டியாகொட பொலிஸ் பிரைிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீட்டொன்றில் தங்கியிருந்த போதே குறித்த 4 சந்தேகநபர்களும் எல்பிட்டிய பொலிஸ் விசேட அதிரடிப்படைப் பிரிவினரால் கடந்த 30 ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
கைது நடவடிக்கையை தொடர்ந்து சந்தேகநபர்கள், ‘கரந்தெனிய சுத்தா’வின் எதிரித் தரப்பு குழுவின் முக்கிய உறுப்பினரைக் கொலை செய்வதற்காக நீண்டகாலமாகத் திட்டமிட்டிருந்தமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் குறித்த நபர்கள் மனித படுகொலை சம்பம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் எனவும் தெரியவந்துள்ளது. பொலிஸார் சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது கைதான சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய, மீட்டியாகொடை பகுதியில் உள்ள அவரது வீட்டின் பின்புறத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் 96 ,9 எம்.எம் ரக துப்பாக்கி ரவைகள் 13 இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை சம்பவம் தொடர்பில் மீட்டியாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.