பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணம் இன்று முதல் உயர்வு!

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணங்களை இன்று (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 5 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் லலித் சந்திரசிறி பெர்னாண்டோ, இதற்கு முன்னர் பலமுறை எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்ட போதிலும், நாட்டின் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் செய்யவில்லை எனக் குறிப்பிட்டார்.

இருப்பினும், இம்முறை டீசல் விலை 22 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஏனைய சங்கங்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் ஊடகங்களிடம் கூறினார்.

அதன்படி, குறித்த கட்டண திருத்தம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக லலித் சந்திரசிறி பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

“தூங்கி எழுந்திருக்கும் போது திடீரென எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. எமது போக்குவரத்து சங்கம் என்ற ரீதியில் கட்டணத்தை 5 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளோம். அதன்படி, ஒரு பாடசாலை மாணவருக்கான கட்டணம் 10,000 ரூபாவாக இருந்தால், அது 500 ரூபாவினால் அதிகரிக்கும். 22 ரூபா விலை அதிகரிப்பானது போக்குவரத்து துறையில் எமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. விருப்பம் இல்லாவிட்டாலும் இந்த முடிவை எடுக்க வேண்டியதாயிற்று.” என்றார்.

ko

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பு!

March 10, 2026

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக, வாக்குமூலம் வழங்குவதற்கு இம்மாதம்

p

பாகிஸ்தானில் பாடசாலைகளுக்கு பூட்டு, வீட்டிலிருந்தே வேலை

March 10, 2026

ரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை சமாளிக்கும் நோக்கில், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ்

5

துப்பாக்கிச் சூடு; மற்றுமொரு சந்தேகநபர் கைது

March 10, 2026

கடந்த ஜனவரி 16ஆம் திகதி ஜிந்துப்பிட்டி பகுதியில் நபரொருவரை சுட்டுக்கொலை செய்து, இரண்டு சிறுவர்களைக் காயப்படுத்திய குற்றச்செயலுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி

v

ஓட்டுமடம் பகுதி பள்ளிவாசலில் வாளேந்திய நபரால் பரபரப்பு

March 10, 2026

யாழ்ப்பாணம், ஓட்டுமடம் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (09) இரவு தொழுகை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, வாளுடன் புகுந்த

d

யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கொண்டு வந்த இரு வர் கைது!

March 10, 2026

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கொண்டு வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ். மாவட்ட

ad

விஜய் ஆலோசனை; அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா?

March 10, 2026

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை உள்ளது. தேர்தலுக்கு புது வரவான நடிகர் விஜய்யின்

tr

டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்திற்கு ஈரான் கடும் எதிர்ப்பு

March 10, 2026

ஈரான் போர் முடிவுக்கு வருவது குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்திற்கு ஈரான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அமெரிக்க

vi

கரூர் விவகாரம் – செந்தில் பாலாஜிக்கு சிபிஐ அழைப்பாணை

March 10, 2026

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கரூரில் நடந்த கூட்ட நெரிசல்

b

நெடுநாள் மீன்பிடி படகு சுற்றிவளைப்பு

March 10, 2026

இலங்கைக்குத் தெற்கே ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் மூட்டைகள் மற்றும் ஆயுதங்களைக் கடத்திச்

Bram

பிராம்ப்டன் நகர தீயணைப்புப்படை நல மேம்பாட்டுத்திட்டம்

March 10, 2026

ஒன்டாரியோ அரசாங்கத்தின் தீயணைப்பு மானியம் (Fire Protection Grant) மூலம் வழங்கப்பட்ட $230,230 முதலீட்டின் உதவியுடன், பிராம்ப்டன் நகரம் தீயணைப்பு

ont

ஒன்ராறியோ மருத்துவமனைகளுக்கு கட்டமைப்பு நிதிக் குறைபாடு?

March 10, 2026

ஒன்ராறியோ முதல்வர் டக் பேர்ட் தனது எட்டாவது பட்ஜெட்டை முன்வைக்கும் முன், மாகாணத்தின் மருத்துவமனைகள் விரைவில் ஒரு பில்லியன் டொலர்

mah

மஹிந்தானந்த, நலின் பெர்னாண்டோ மேல்முறையீடு!

March 10, 2026

முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நலின் பெர்னாண்டோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று (10)