படகு விபத்து; 27 பேரின் உடல்கள் மீட்பு; காணாமல் போன 83 பேரை தேடும் பணி தீவிரம்

தென் அமெரிக்க நாடான கயானாவின் வட அத்திலாந்திக் கடற்கரைக்கு அப்பால், பயணிகள் படகு ஒன்று சனிக்கிழமை (18) இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

மீட்புக் குழுவினர் இதுவரை 69 பேரை உயிருடன் மீட்டுள்ள போதிலும், மேலும் 83 பேர் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர்.

ஆரம்பத்தில் படகில் 133 பேர் மட்டுமே பயணித்ததாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மீட்கப்பட்ட பலரின் பெயர்கள் உத்தியோகபூர்வப் பட்டியலில் இல்லாததால், படகில் 179 பேர் வரை பயணித்திருக்கக்கூடும் எனப் பிரதமர் மார்க் பிலிப்ஸ் திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் ஜுவான் எட்ஜில் நடத்திய வைத்தியப் பரிசோதனையில், படகோட்டி மற்றும் ஊழியர் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தமை உறுதியாகியுள்ளது.

பணி நேரத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாலும், பயணிகளின் எண்ணிக்கையை முறைப்படுத்தத் தவறியதாலும் படகோட்டி மற்றும் ஊழியர்களைப் பொலிஸார் உடனடியாகக் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

கயானா தலைநகர் ஜோர்ஜ்டவுனில் இருந்து போர்ட் கைடூமா பகுதிக்குச் சென்றபோது, சனிக்கிழமை இரவு 11:01 மணிக்கு படகில் இருந்து ஆபத்துச் சமிக்ஞை அனுப்புவதற்கு முன்பே படகு சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எலினா மூன்சாமி என்ற பயணி ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில,

“இராட்சத அலை ஒன்று மோதிய சில வினாடிகளிலேயே படகிற்குள் நீர் வேகமாகப் புகுந்து கவிழ்ந்தது. மிதந்து வந்த மரப்பெட்டி ஒன்றை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு நான் உயிர் பிழைத்தேன். ஆனால், என் 2 வயதுக் குழந்தையின் கையைப் பிடித் திருந்தும், அலையின் வேகத்தில் என் கை நழுவி குழந்தை நீரில் மூழ்கிவிட்டான்” எனப் பேரதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகளுக்கு உதவ அருகிலுள்ள பிரெஞ் கயானாவில் இருந்து பிரெஞ் இராணுவம் 12 அனுபவமிக்க உயிர்காப்பு பிரிவினர், 2 வைத்தியர்கள் மற்றும் மெக்கானிக் ஒருவரை அனுப்பியுள்ளது.

கடலில் மிதந்த 17 க்கும் மேற்பட்டோரை அப்பகுதியைச் சேர்ந்த சிறிய தனியார் மீன்பிடிப் படகுகள் மீட்டுள்ளன. மீட்கப்பட்ட 15 சிறுவர்கள் உட்பட 69 பேரில் பெரும்பாலானோருக்குச் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர்.

“காணாமல் போனவர்களை தேடிக் கண்டுபிடிப்பதிலேயே எங்கள் முழு கவனமும் உள்ளது. இன்னும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதேநேரத்தில், இந்தத் துயரச் சம்பவங்கள்அதிகாரிகளின் அலட்சியமோ, விதிமீறலோ அல்லது குற்றவியல் தவறுகளோ காரணமெனில், சம்பந்தப்பட்டவர்கள் கடும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வார்கள்.” கயானா பிரதமர் மார்க் பிலிப்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்

LNUXYUAULNCK7GSPUXGXBRCQKM

இது கவலையளிக்கிறது’: வெறுப்புணர்வு சார்ந்த தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவங்களில் ரொறன்ரோவிலுள்ள யூதர்களுக்குச் சொந்தமான 2 பேக்கரி கிளைகள் இலக்கு வைப்பு

July 27, 2026

பெருமளவிலான ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த (GTA) பல யூத தொழுகைக்கூடங்கள் (synagogues) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார்

death

குளியலறையில் உருக்குலைந்த நிலையில் சடலம்

July 27, 2026

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

kava

காவடி நடனத்தை நீக்க பரிந்துரை

July 27, 2026

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார்

wate

இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 27, 2026

மொனராகலை- வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

aads

மன்னாரில் 43ஆவது தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

July 27, 2026

நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983ஆம் ஆண்டு, கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல்

an

விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் தொடர்பில் புதிய சட்டம்

July 27, 2026

விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இலங்கையின் சட்டக்

hurm

ஹோர்முஸில் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் வெடிப்பு?

July 27, 2026

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று கண்ணிவெடி ஒன்றில் சிக்குண்ட நிலையில் வெடித்து சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள்

Death-2

பாடசாலை மாணவி திடீர் மரணம்: பெற்றோர் சந்தேகம்

July 27, 2026

பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த