நுரைச்சோலைக்கு தரம் குறைந்த நிலக்கரி; மின்னுற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதோடு பாரிய நஷ்டமும் ஏற்பட்டுள்ளது – நளின் பண்டார

நுரைச்சோலைக்கு தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் நாட்டில் மின்னுற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதுடன், பாரிய நஷ்டமும் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

வியாழக்கிழமை (2) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இறுதியாக நாட்டை வந்தடைந்த 13ஆவது கப்பலில் கொண்டு வரப்பட்ட நிலக்கரி தொகையே தற்போது நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு வழமையை விடக் குறைந்தளவிலேயே காணப்படுகிறது. தரம் குறைந்த நிலக்கரியால் மூன்றில் இரண்டு பங்கு மின்னுற்பத்தி மாத்திரமே இடம்பெறுகிறது.

இது இவ்வாறிருக்க மறுபுறத்தில் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் சடுதியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 15 – 20 சதவீத மின்னுற்பத்தியே நீர்த்தேக்கங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது எரிபொருட்களும் எமக்கு உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. இதனால் மசகு எண்ணெய்க்கு பதிலாக டீசலைப் பயன்படுத்தியே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தரம் குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதால் நாட்டுக்கு பல்வேற துறைகளிலும் இவ்வாறு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி கடந்த சில நாட்களாக நுரைச்சோலையிலேயே தங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அங்கிருந்து கொண்டு அதிகாரிகளுக்கு சிறப்புரிமைகளையும் சலுகைகளையும் வழங்கி இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு அவர் முயற்சிக்கின்றார். விரைவில் இலங்கை மின்சாரசபையின் தலைவரும் ஓய்வு பெறவுள்ளார். அதன் பின்னர் குமார ஜயக்கொடி தனக்கு நெருக்கமான ஒருவரையே அப்பதவிக்கு நியமிப்பார்.

இந்த ஊழல்வாதியான அமைச்சரவை உடனடியாக பதவி நீக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ள போதிலும், அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. எனவே நாம் நம்பிக்கையில்லா பிரேரணையையும் சமர்ப்பித்திருக்கின்றோம். ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையா அல்லது டில்வின் சில்வா தலைமையிலான பெலவத்தை அலுவலகமா இந்த மோசடிகளுடன் தொடர்புபட்டுள்ளது என்பதும் தெரியாமலுள்ளது.

விலை அதிகரிப்பை தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் எரிபொருள் பாவனையைக் குறைத்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சாரப்பாவனை குறைவது சிறந்ததல்ல. அது நாட்டின் அபிவிருத்திக்கு சிறந்ததல்ல என்றார்.

700143194_1655450296585491_8134693410360305297_n

ஒட்டுசுட்டான் பிரதேச இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்

May 14, 2026

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு 14.05.2026 இன்று முன்னெடுக்கப்பட்டது.

700189135_122169234878957506_7205029632651731545_n

ஊர்காவற்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முதல் முறையாக பிரதேசமக்கள் தமது சுய பிரயத்தனத்தினால் , முள்ளிவாய்க்கால் படுகொலைகள் – இனஅழிப்பு மற்றும் தொடரும் தேசிய இன

arrest

மென்பொருள் மோசடி: குடிவரவு திணைக்கள தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் கைது

May 14, 2026

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையை அடுத்து, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர்

Hemarathne

பிக்குவால் சிறுமி துஷ்பிரயோகம்: 22ஆம் திகதி வரை பிக்குவுகடகு விளக்கமறியல்!

May 14, 2026

15 வயது சிறுமி ஒருவரை தவறானமுறைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அத்தமஸ்தானத்தின் பொறுப்பாளரான பல்லேகம ஹேமரத்ன தேரரை, வரும் 22ஆம் திகதி

hu

பெறுமதிமிக்க பொருட்களை திருடிய இளம் கணவன் மனைவி கைது

May 14, 2026

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீட்டு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளம் தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி

yoshitha-rajapaksa

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை நிராகரித்தது மேல் நீதிமன்றம்!

May 14, 2026

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு தொடர்பாகப் பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை (Preliminary objection) கொழும்பு மேல்

Screenshot 2026-05-14 115508

அதிமுகவில் உச்சகட்ட மோதல்! ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு; ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள

p-sanmugam

“100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ல் சமாதி!” – பாஜக அரசின் புதிய திட்டத்தை சாடிய பெ. சண்முகம்!

May 14, 2026

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) வரும் ஜூன் 30-ஆம்

3

“தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி

May 14, 2026

சென்னை: “தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” எனத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு

collage-down-1714447028

சிறார்கள் கையில் மதுவா? – 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! டாஸ்மாக் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

1778468918-6452

“லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது!” – நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முதல்வர் விஜய் அதிரடி அறிக்கை!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு

1500x900_834373-kb-munusami

“பதவி எனும் துண்டுக்காக கழகம் எனும் வேட்டியைக் கழற்றாதீர்கள்!” – சி.வி.சண்முகம் தரப்பிற்கு கே.பி. முனுசாமி கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சி.வி. சண்முகம் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து,