“நீலகாமம் பிரகடனம்” அரசியல் தலைவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது

இரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பு மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்தும், மலையக மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் நேற்று வெளியிடப்பட்ட “நீலகாமம் பிரகடனம்” அரசியல் தலைவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

சமூக செயற்பாட்டுக்கான இளைஞர் குழு ஏற்பாட்டில் கஹவத்தை, நீலகாமம் முதலாம் இலக்கப் பிரிவுத் தோட்டத்தில் நேற்று இடம்பெற்ற திறந்தவெளி மக்கள் கலந்துரையாடல் நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தோட்ட தொழிலாலளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இப்பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த 2026 ஏப்ரல் 22ஆம் திகதி நீலகாமம் தோட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்ட மலேச்சத்தனமான தாக்குதலானது, நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் எமது இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதுடன் இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தோட்ட நிர்வாகங்களால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான தொழிலாளர் அடக்குமுறைகள் மற்றும் அராஜகங்களை இனிமேலும் தாங்கிக் கொள்ள முடியாது.தோட்டத் தொழிலாளர்களையோ அல்லது பெருந்தோட்டங்களைச் சார்ந்திருப்போரையோ அச்சுறுத்துதல் மற்றும் அடக்குமுறைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளைத் தோட்ட நிர்வாகங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

குறிப்பாகத் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் முன்னாள் பாதுகாப்புப் படையினரை அழைத்து வந்து தாக்குதல்கள் நடத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு ஒவ்வொரு தோட்டத்திலும் தோட்டத் தலைவர்கள், நிர்வாக சபையினர், சட்டத்தரணிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய ‘தொழிலாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு’ உருவாக்கப்பட வேண்டும்.

இக்குழுக்கள் பெருந்தோட்ட மற்றும் சமூக வசதிகள் அமைச்சின் கண்காணிப்புடன் மாவட்ட ரீதியில் செயற்படுத்தப்படுவது அவசியமாகும்.

மேலும், இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தேசத்திற்காக உழைக்கும் மக்களுக்கு முறையான முகவரியுடன் கூடிய காணி மற்றும் வீடமைப்புத் திட்டத்தை பாராளுமன்றமும் தற்போதைய அரசாங்கமும் பாரபட்சமின்றி முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும்.

இதற்காகச் சுயாதீனமாக இயங்கும் குழுவொன்றைப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்க வேண்டும்.மலையகப் பகுதிகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் பட்சத்தில், கட்சி மற்றும் பிரதேச வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைத்துத் தமிழ் அரசியல் தலைமைகளும் ஓரிடத்தில் கூடி ஆராய்ந்து ஒற்றுமையாகத் தீர்க்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

பெருமழைக் காடுகளை அழித்துத் தேயிலைத் தேசங்களை உருவாக்கிய நாம், எமது மண்ணில் வாழும் உரிமையைப் பறிக்க யாருக்கும் அனுமதி வழங்கப் போவதில்லை. எமது உரிமைக்காகவும் வெற்றிக்காகவும் தொடர்ந்து போராடுவோம் என இப்பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sakara

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – சாகர காரியவசம்!

October 13, 2026

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பலவிடயங்களை வெளிப்படுத்தினார். சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக தவறுகளை

mini

அமைச்சரைச் சந்திக்க தமிழ் பெண்கள் சங்கம் கோரிக்கை

October 13, 2026

சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் கலை, கலாசாரத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நிறுவுவதற்கு உத்தேசித்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கலாலயா கலாசார மற்றும் இளைஞர்

zer

சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினம்; 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு!

October 13, 2026

2050 ஆம் ஆண்டளவில் ‘பூஜ்ஜிய கார்பன்’ (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி

fue

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

October 13, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026

arju

அர்ச்சுனாவின் பதவியில் சிக்கல்: விரைவில் விசாரணை!

October 13, 2026

டாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும்

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்