திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுடீன் வழங்கிய சட்டபூர்வப் பிடியாணை உத்தரவை விமர்சித்து, கௌரவ மன்றையும் நீதிபதியையும் அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த பலாங்கொடை கஸ்ஸப தேரரின் நடவடிக்கைக்குத் தமது கடும் கண்டனத்தைத் தெரிவித்து, வெள்ளிக்கிழமை (13.11.2026) காலை திருகோணமலை மாவட்டச் சட்டத்தரணிகள் சங்கத்தினர் திருகோணமலை நீதிமன்றத் தொகுதிக்கு முன்பாகக் கண்டனக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“நீதித்துறை எவ்வித அழுத்தங்களுமின்றி, சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயற்படுவதற்கு அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும்,” எனச் சட்டத்தரணிகள் சங்கத்தின் திருகோணமலைக் கிளைத் தலைவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.