நீதித்துறை உள்ளடக்கங்களை மாற்றியமைக்கும்போது அரசியலமைப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும்

நீதிபதிகளின் பதவிக்கால நிர்ணயம் என்பது நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கிய விடயமாகும். அவ்வாறிருக்கையில் நீதித்துறை சார்ந்த பதவிகள் தொடர்பான அரசியலமைப்பு உள்ளடக்கங்களை மாற்றியமைக்கும்போது பொது இணக்கப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் அரசியலமைப்பு விதிகள் என்பன முறையாகப் பின்பற்றப்படவேண்டும் என புதன்கிழமை (29) இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக நாட்டின் சகல நீதிமன்றங்களின் நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்துவதற்கான யோசனைக்கு கடந்த திங்கட்கிழமை (27) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள விவகாரம் கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ள பின்னணியில், இதுபற்றி ஆராயும் நோக்கில் விசேட சந்தர்ப்பங்களின்போது மாத்திரம் கூடும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச்சபை நேற்று புதன்கிழமை (29) மு.ப 11.00 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள சட்டத்தரணிகள் சங்கக் கட்டடத்தில் கூடியது.

நாட்டிலுள்ள சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது குறித்து அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானத்தை முற்றாக எதிர்க்கவேண்டும் என இக்கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், அத்தீர்மான வரைவில் உள்ளடங்கியுள்ள ஏனைய முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்துவமானது அரசியலமைப்பின் அடிப்படை தூணாகும். அத்தோடு சட்டத்தின் ஆட்சி, அரசியலமைப்பு அடிப்படையிலான ஜனநாயகம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இது இன்றியமையாததாகும்.

நீதிபதிகளின் பதவிக்கால நிர்ணயம் என்பது நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கிய விடயமாகும். அவ்வாறிருக்கையில் நீதித்துறை சார்ந்த பதவிகள் தொடர்பான அரசியலமைப்பு உள்ளடக்கங்களை மாற்றியமைக்கும்போது பொது இணக்கப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் அரசியலமைப்பு விதிகள் என்பன முறையாகப் பின்பற்றப்படவேண்டும்.

தற்போது பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக சகல நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை அந்த நீதிபதிகள் பதவியில் இருக்கும்போதே அரசாங்கம் முன்மொழிந்திருக்கிறது. இவ்வாறானதொரு திருத்தத்துக்கான தேவைப்பாடோ அல்லது கட்டமைப்பு ரீதியான நியாயப்படுத்தல்களோ மக்களிடத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை.

அதேபோன்று இந்த யோசனை நீதித்துறை, சட்டத்தரணிகள் சமூகம், கல்வியியலாளர்கள், சிவில் சமூகம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விரிவான கலந்தாலோசனைகள் இன்றியும், சுயாதீன மற்றும் அரசியலமைப்பு ரீதியிலான பரிசீலனைகள் இன்றியும் முன்வைக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சினால் சகல பங்குதாரர்களுடனும் நடாத்தப்பட்ட விரிவான கலந்துரையாடல்களின் பின்னர் தயாரிக்கப்பட்ட ‘இலங்கையின் நீதித்துறை பற்றிய மதிப்பீடு மற்றும் மூலோபாய நடவடிக்கைத் திட்டம்: வணிக, ஒப்பந்த மற்றும் முதலீட்டுச் சட்டங்களை நடைமுறைப்படுத்தல்’ எனும் திட்டத்தின் ஊடாக நீதித்துறையை வலுப்படுத்துவதற்கு அவசியமான பல்வேறு கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்கள் அடையாளங்காணப்பட்டிருந்த போதிலும், அதில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரித்தல் என்ற விடயம் ஒரு முக்கிய திருத்தமாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கவில்லை.

நீதித்துறை முகங்கொடுத்திருக்கும் முக்கிய பிரச்சினைகளான நீதிபதி வெற்றிடங்கள், வழக்கு விசாரணையில் தாமதம், போதிய வளங்கள் இன்மை, தொழில்நுட்ப நவீனமயமாக்கல் இன்மை, பரந்துபட்ட கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்கள் என்பவற்றுக்கே விசேட கவனம் செலுத்தப்படவேண்டும். அத்தோடு தற்போது சேவையில் இருக்கும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை மாற்றியமைப்பதற்குப் பதிலாக, தற்போது நிலவும் நீதிபதி வெற்றிடங்கள் அரசியலமைப்புக்கு அமைவாக விரைவாக நிரப்பப்படவேண்டும்.

மேலும் கடந்தகால அரசியலமைப்பு அனுபவங்களைப் பொறுத்தமட்டில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை திருத்தப்பட்ட சந்தர்ப்பங்களில், அவை பரந்துபட்ட கலந்தாய்வு செயன்முறையின் பின்னரே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்மூலும் தற்போது பதவியிலிருக்கும் குறிப்பிட்ட சில நீதிபதிகளை இலக்குவைத்தே இத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற எண்ணம் உருவாகாது.

நீதி நிலைநாட்டப்படல் தொடர்பான பொதுமக்களின் நம்பிக்கையானது நீதித்துறையின் உண்மையான சுயாதீனத்துவத்தில் மாத்திரமன்றி, அந்த சுயாதீனத்துவம் வெளிப்படையாகப் புலப்படுவதிலும் தங்கியுள்ளது.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்