நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் மண்டைதீவு சுற்றுலா மையம் தொடர்பாக முறைப்பாடு

வேலணை – மண்டைதீவு சுற்றுலா மையத்தின் உருவாக்கலில் (எகோ ரூரிசம்) அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் அரச உயர் அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதனால் இந்த முறைப்பாடு இன்று (11.03.2026) பதிவு செய்யப்பட்டுள்ளது.

மண்டைதீவில் சுற்றுலா அமைச்சினால் அமைக்கப்பட்ட “எக்கோ ரூறிசம்” திட்டம் தோல்வியடைய அன்றிருந்த அரச அதிகாரிகளே காரணம் என குற்றம் சாட்டப்பட்டுவரும் நிலையில் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில், அன்றைய யாழ். மாவட்ட அரச அதிபராக இருந்த நாகலிங்கம் வேதநாயகன், அன்றைய காலப் பகுதியில் வேலணை பிரதேச செயலர்களாக இருந்த சுகுணாரதி தெய்வேந்திரம் மற்றும் அ.சோதிநாதன் ஆகியிரால் வேலணை பிரதேசத்திற்கு சுமார் 77 மில்லியன் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டின் பின் கருத்துத் தெரிவித்த பிரகலாதன் கூறுகையில், வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2016 ஆண்டு மண்டைதீவில் சுற்றுலா அமைச்சினால் அமைக்கப்பட்ட திட்டமே இந்த “எக்கோ ரூறிசம்” திட்டமாகும். இது 77 மில்லியனுக்கும் அதிக நிதி முதலீட்டில் செயலுருவாக்கம் பெற்றது.

ஆனாலும் முறையான பொறிமுறை திட்டவரைபு இல்லாமையால் அது அதன் நோக்கத்தில் தோல்வி கண்டுள்ளது. குறிப்பாக திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னரே இறங்கு துறையை அமைப்பதற்காக 50 மில் லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் இறக்குமதி செய்யபட்டது. 2016 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட குறித்த பொருட்கள் கடந்த பல வருட காலமாக வேலணை கடற்கரையில் பாவனையின்றி அழிந்துபோகும் நிலையில் இருக்கின்றன.

அதுமட்டுமல்லாது இத்திட்டம் தோல்வியடைந்து அல்லது மோசடிகளால் பாதிக்கப்பட்டதை அன்றிருந்த பிரதேச செயலர் மூடி மறைத்துவந்தார். அதன் பின்னர் மத்திக்கு குறித்த விடயம் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அது தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில் அன்றிருந்த மாவட்ட செயலளர் வேதநாயகன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி முற்றாக மறைத்து தனது அதிகாரிகளை பாதுகாத்திருந்தார்.

அதுமட்டுமல்லாது அதிகாரங்களை பிரயோகித்து 2020 ஆம் ஆண்டு அந்த பொறுப்பை வேலணை பிரதேச சபையிடம் திணித்து பொறுப்பேற்கச் செய்தனர். எனவே இந்த திட்டத்தில் ஏப்பமிடப்பட்ட அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உண்மை கண்டறியப்பட்டு இழக்கப்பட்ட நிதியை மீட்டு சபையிடம் வழங்க வேண்டும் என்ற நோக்குடனேயே குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ceb v

20 முதல் 30 சதவீதம் அதிகரிக்கும் மின் கட்டணம்?

March 11, 2026

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் மின் கட்டணங்களை 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்

ve

இலங்கை அகதிகள் தமிழகத்திலிருந்து நாடு திரும்புவதற்கு விசேட உதவி

March 11, 2026

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான ‘லன்ரேன்’ திட்டத்தை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்

ch

கொழும்பில் சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சி மற்றும் இலக்கிய விழா!

March 11, 2026

இலங்கையின் வாசிப்பு கலாசாரத்தை மேம்படுத்தும் நோக்கில், நாட்டில் முதன்முறையாக கொழும்பு சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சியும் இலக்கிய விழாவும் –

po

அமைதிக்கான அழைப்பு விடுக்கும் பாப்பரசர் லியோ

March 11, 2026

ஈரானிலும் மத்திய கிழக்கு முழுவதிலும் இடம்பெற்று வரும் போரில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்போம் என புனித பாப்பரசர் லியோ

Judment

ஊழல் குற்றச்சாட்டு; மஹிந்தானந்தவின் மேன்முறையீடு தீர்ப்பு ஒத்திவைப்பு

March 11, 2026

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல்

ha

சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தைப் பார்வையிட்டார் பிரதமர்

March 11, 2026

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, புதன்கிழமை (11)

arrest

சட்டவிரோத சொத்து சேகரிப்பு; முன்னாள் தலைமை கணக்காளர் ஒருவர் கைது

March 11, 2026

சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னாள் தலைமை கணக்காளர் ஒருவரை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு

g

சர்வதேச எரிசக்தி முகவரகம் எண்ணெய் விடுவிப்புக்கு அனுமதி

March 11, 2026

ஹோர்முஸ் நீரிணை செயலற்ற முறையில் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடையைச் சமாளிக்க, 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விடுவிக்க

ceb

மின்சார சபை ஊழியர் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

March 11, 2026

மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு இன்று (11) கைவிடப்பட்டுள்ளது. மின்சார சபை கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட

cu

454 ஆப்பிள் ரக கையடக்கத் தொலைபேசிகள் தொகை பறிமுதல்

March 11, 2026

சுமார் ஒரு கோடியே 36 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய 454 ஆப்பிள் ரக கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமான

lau

இன்று நள்ளிரவு முதல் லாஃப் விலையும் அதிகரித்தது

March 11, 2026

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் சமையல் எரிவாயு விலையும் அதிகரித்துள்ளது. 12.5 கிலோ சிலிண்டர் 300

hur

ஆபத்தான கண்ணிவெடிகளை ஹார்முஸ் ஜலசந்தியில் இறக்கிய ஈரான்!

March 11, 2026

உலகின் மிக முக்கியமான எரிசக்தி மையங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் ஈரான் ஆபத்தான கண்ணிவெடியை வைத்துள்ளமையினால் அமெரிக்கா