சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை, 2026 ஜூலை 7-ஆம் தேதியன்று நடத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று காலை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கிற்கு முன்னதான மாநாடு (Pre-trial conference) நிறைவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜூலை மாதம் வழக்கின் விசாரணைகளைத் தொடங்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
குற்றச்சாட்டுகளின் பின்னணி:
-
இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக என்று கூறி, இந்தியாவின் கிரிஷ் (Krrish) நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டதன் மூலம், நாமல் ராஜபக்ச நம்பிக்கைத் துரோகம் இழைத்ததாக சட்டமா அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்.