நாமலின் கிரிஷ் விசாரணை; இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை கோரல்

கிரிஷ் (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை, எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இவ்வழக்குத் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தபோதிலும் (வேறு வழக்குகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள) சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் மற்றொரு சந்தேகநபரான ஜானகி சிறிவர்தன ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான அதன் உதவிப் பணிப்பாளர் நீதிமன்றத்தில் விடயங்களைத் தெளிவுபடுத்துகையில்; “இவ்விசாரணை தொடர்பாகக் கொழும்பு பிரதேச செயலாளர், முன்னாள் காணி ஆணையாளர் உள்ளிட்ட தரப்பினரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், கோட்டை ட்ரான்ஸ்வேர்க் சதுக்கத்தில் அமைந்துள்ள காணியை கிரிஷ் நிறுவனத்திற்குக் கையளித்தமை தொடர்பில், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளன” எனத் தெரிவித்தார்.

மேலும், இவ்வழக்குடன் தொடர்புடைய ஆவணமொன்றில் காணப்படும் சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவின் கையெழுத்து குறித்து ஆய்வு செய்வதற்காக, குறித்த ஆவணம் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஆய்வை முன்னெடுப்பதற்குக் குறித்த ஆவணத்தின் மூலப் பிரதியை (Original) இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் கோரியுள்ளதாகவும் அவர் மன்றில் சுட்டிக்காட்டினார்.

குறித்த மூல ஆவணம் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 07ஆம் இலக்க அறையிலுள்ள வழக்குக் கோவையில் இருப்பதால், அதனைப் பெற்று அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைப்பதற்குத் தேவையான உத்தரவைக் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 07ஆம் இலக்க அறைப் பதிவாளருக்குப் பிறப்பிக்குமாறும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதான நீதவான், “இன்றைய தினம் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக அறிக்கையில் இக்கோரிக்கை உள்ளடக்கப்படவில்லை” எனச் சுட்டிக்காட்டினார். அதற்கமைய, உரிய ஆவணங்களுடன் எதிர்வரும் தினமொன்றில் இக்கோரிக்கையை மன்றில் முன்வைத்து அதனை உறுதிப்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, இவ்வழக்கை எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதவான், அதுவரை சந்தேகநபரான ஜானகி சிறிவர்தனவை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பித்தார்.

பின்னணி: கொழும்பு, ட்ரான்ஸ்வேர்க் சதுக்கத்தில் அமைந்துள்ள காணியொன்றைப் பல்நோக்குத் திட்டமொன்றுக்காக இந்தியாவின் ‘கிரிஷ்’ நிறுவனத்திற்கு வழங்குவதில், 70 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அந்நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தன ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

sava

தந்தையும் 9 வயது மகனும் உயிரிழப்பு; சாவகச்சேரியில் விபத்து!

November 14, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் – பருத்தித்துறை வீதியின் கனகம்புள்ளியடி சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில்

image_2bf71ea038

பாடசாலைக் கல்விச் சான்றிதழ் சர்ச்சை : இந்தோனேசிய உப ஜனாதிபதி இராஜினாமா

November 14, 2026

தனது உயர்தரப் பாடசாலைக் கல்விச் சான்றிதழின் சட்டபூர்வத்தன்மை தொடர்பில் எழுந்த கடும் சர்ச்சைகளைத் தொடர்ந்து, இந்தோனேசிய உப ஜனாதிபதி கிப்ரான்

jud

நீதித்துறை சுயாதீனத்தை வலியுறுத்தித் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு

November 14, 2026

திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுடீன் வழங்கிய சட்டபூர்வப் பிடியாணை உத்தரவை விமர்சித்து, கௌரவ மன்றையும் நீதிபதியையும் அவமதிக்கும்

us

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் தடை நீக்கம்!

November 14, 2026

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்துத் தடை நீக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் போக்குவரத்துச் செயலாளர் ஷோன்

ss

தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் ரூ. 200 கோடி போதைப்பொருள்!

November 14, 2026

இலங்கைக்குத் தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஏற்றிய மீன்பிடிப் படகு நேற்று (13) காலி துறைமுகத்திற்குக்

teaf

ஆசிரியர் மீது மாணவன் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பார்ட்டம்

November 14, 2026

திருகோணமலை, அபயபுர பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், பாடசாலை நேரத்தின்போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, மாணவன் ஒருவனால் ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலில்

tho

’தேஹிபாலே மல்லி’ ஜோர்ஜியாவில் கைது

November 14, 2026

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் தென்பகுதியின் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான படபெந்தி மத்துமகே

th

திருவள்ளுவர் சிலை தென் கொரியாவில் திறப்பு

November 14, 2026

​கொரியத் தமிழ்ச் சங்கம், கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம் மற்றும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்

For em

ஏமாற்றப்பட்ட 40 இலங்கையர்களுக்கு உதவி?

November 14, 2026

சவூதி அரேபியாவில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 40 இலங்கைப் பணியாளர்களுக்கு, அவர்களுக்குரிய நிலுவைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக சுமார் 569

lau

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு

November 14, 2026

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய,

image_8ee04cb420

நாமலின் கிரிஷ் விசாரணை; இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை கோரல்

November 14, 2026

கிரிஷ் (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை, எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி

8

“திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் ரூ.2,200 கோடி ஊழல்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!

November 13, 2026

சென்னை: திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் பேட்ச் ஒர்க் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 2,200 கோடி ரூபாய் அளவுக்கு