நான்கு மாடிக்கட்டடத்திலிருந்து விழுந்த பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

குருநாகல், உடவல்பொல பகுதியில் நான்கு மாடிக்கட்டடத்தின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருநாகலில் உள்ள புகழ்பெற்ற சர்வதேச பாடசாலையில் படித்து வந்த 16 வயது மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாணவர் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் தற்காலிகமாக நான்கு மாடிக்கட்டடத்தில் தங்கியிருந்தபோது, கடந்த 8 ஆம் திகதி அதிகாலை கீழே விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவர், மூன்று பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் மூத்த மகன் ஆவார். அவருக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். அவரது தந்தை ஒரு வழக்கறிஞர். அவரது தாய் ஒரு பாடசாலை ஆசிரியை ஆவார்.

இந்த பல மாடி கட்டடத்தின் தரைத்தளத்தில் ஒரு பிரபலமான தனியார் கண்ணாடி வணிகமும், மேல் மூன்று தளங்கள் குடியிருப்புகளுக்கும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

உயிரிழந்த மாணவர் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு வீட்டிற்கு குடிபெயர்ந்ததாகக் கூறப்படுகிறது.

குறித்த மாணவர் உயிரிழக்கும் போது தனது காலணிகளை மாடியில் முறையாகக் கழற்றி வைத்துள்ளமை மற்றும் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கைபேசி என்பன அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இறப்பதற்கு முன்பு அவர் தனது தந்தையின் கைபேசியைப் பயன்படுத்தி வந்ததும், அதில் ஒரு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு இயங்கிக் கொண்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவர் அந்த நேரத்தில் ஒரு வகையான சூதாட்டத்தில் (விளையாட்டில்) ஈடுபட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் நெருக்கமான தொழில்நுட்பமாக கைபேசிகள் இருந்தாலும், மறுபுறம், அந்தத் தொழில்நுட்பத்தின் முடிவு மரணமாகவும் அமையலாம். எனவே, இந்த மிகவும் அபாயகரமான அம்சத்தைக் கருத்தில் கொண்டு, உலகின் பல நாடுகள் வயதுக்குட்பட்ட குழந்தைகள் கைபேசிகளைப் பயன்படுத்துவதை தடை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

BRXPQSLKS5GHVGE3XXHDA5IH6M

நோர்த் யோர்க்கில் துப்பாக்கியுடன் காணப்பட்டதாகக் கூறப்படும் நபரைத் தேடும் பொலிஸார்

July 26, 2026

வெள்ளிக்கிழமை பிற்பகல் நோர்த் யோர்க் (North York) பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் தேடி

N32AHFWGRNDKDEHVEIQNHXL7SQ

கிறிஸ்டி பிட்ஸ் (Christie Pits) அருகே இருவர் மீது கத்திக்குத்து: முகமூடி அணிந்த சந்தேகநபரைத் தேடும் டொராண்டோ பொலிஸார்

July 26, 2026

டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சனிக்கிழமை இரவோடு இரவாக இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத்

nufsdf

நுவரெலியா வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ

July 26, 2026

நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ காரணமாக இதுவரை

se

கடலலையில் சிக்கிய இருவர் மீட்பு

July 26, 2026

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துக்கால கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நீரோடைக்குச் சிக்கி சனிக்கிழமை (25) அன்று கடலுக்குள் அடித்துச்

arr

உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை; மயானத்தில் இருவர் கைது

July 26, 2026

பொரலஸ்துவை – பெல்லன்வில உணவக உரிமையாளருக்குச் சுட்டுக்கொலை செய்துவிட்டுத் தப்பியோடிக்கொண்டிருந்த துப்பாக்கித்தாரியும் ஓட்டுநரும், துப்பாக்கிச் சூடு இடம்பெற்று ஒரு மணி

de

டெங்கு பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

July 26, 2026

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை

acci main

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு; புளியங்குளத்தில் சம்பவம்

July 26, 2026

புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 பிரதான வீதியின் பூதூர் பகுதியில், வவுனியா திசை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று

wea

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

July 26, 2026

வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால்

vehicle

1,025 வாகனங்கள் துறைமுகத்தில் முடக்கம்

July 26, 2026

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,025 வாகனங்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என

kas

கஸ்பியன் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல்

July 26, 2026

கஸ்பியன் கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக

Murder

பெல்லன்வில படுகொலை: பின்னணி அம்பலம்!

July 26, 2026

பெல்லன்வில உணவக உரிமையாளரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மின்னேரியா

fi

இதுவரை கொழும்பில் மாத்திரம் 258 தீ விபத்துக்கள்

July 26, 2026

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத்