நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை!

ரிபொருள் விநியோகத்திற்காக QR குறியீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூரு நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் அவசர எரிபொருள் தேவை ஏற்பட்டால் அதனைப் பெற்றுக்கொள்வது குறித்து இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவை மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இன்று (15) காலை 6:00 மணி முதல் QR குறியீட்டு முறைக்கு அமைவாக எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முன்னர் QR குறியீட்டைப் பெற்ற, அதே வாகனம் மற்றும் தொலைபேசி இலக்கத்தை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

பழைய QR குறியீடு இருப்பின் அதையே பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

புதிதாக QR குறியீட்டைப் பெற வேண்டியவர்கள் https://fuelpass.gov.lk/ என்ற இணையதளத்தின் மூலம் அதனைப் பதிவிறக்கம் செய்யலாம்.

“கடந்த சில நாட்களாகப் பலரும் எரிபொருளைச் சேமித்து வைப்பதையும், ஊடகச் சந்திப்புகள் மூலம் எரிபொருள் வரிசைகளை உருவாக்குவதையும் அவதானித்தோம். இதனால் ஒரு அபாயகரமான நிலை ஏற்படலாம் என்பதால் தான் QR முறையை மீண்டும் கொண்டுவந்தோம். மற்றபடி எரிபொருளுக்குப் பிரச்சினை இல்லை. எவரும் வரிசையில் நிற்காமல் எரிபொருளைப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும்” எனத் தெரிவித்தார்.

45666

கொக்குதொடுவாய் – குஞ்சுக்கால்வெளியில் அத்துமீறி உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்த நடவடிக்கை!

March 15, 2026

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில், கொக்குதொடுவாய் குஞ்சுக்கால் வெளியிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக தனியார் காணிகளில் உப்பளம் அமைப்பதற்கு மகாவலி

leba

லெபனானில் இதுவரை 850 பேர் வரை பலி

March 15, 2026

இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக லெபனானில் இதுவரையில் 850 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனான் சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில்

56699

சாரதிகள் கடும் அவதி

March 15, 2026

QR நடைமுறையின் கீழ் வாராந்தம் வழங்கப்படும் எரிபொருள் அளவு போதுமானதாக இல்லை எனத் தெரிவித்து, மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில்

acc

அமைச்சரின் சகோதரர் விபத்தில் பலி

March 15, 2026

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற வீதி விபத்தில், பொதுப் பாதுகாப்பு

popp

அப்பாவி உயிர்கள் இழக்கப்படுவது குறித்து போப் ஆழ்ந்த கவலை

March 15, 2026

த்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஈரான்-இஸ்ரேல் மோதலில் ஏராளமான அப்பாவி உயிர்கள் இழக்கப்படுவது மற்றும் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து

4555

இனிவரும் காலங்களில் எரிபொருளை முறையாக விநியோகிக்க பொலிஸாரின் உதவி!

March 15, 2026

இனிவரும் காலங்களில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக QR முறையின் கீழ் மாத்திரமே எரிபொருள் விநியோகம் செய்யப்படும்

hea

அதிக வெப்பத்துடனான காலநிலை; 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

March 15, 2026

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ,

ha

முன்பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டம்

March 15, 2026

027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதோடு, அதற்கான ஆசிரியர் பயிற்சிகளும் வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

fff

போதைப்பொருளுடன் பயணித்த படகு ஒன்று கண்டுபிடிப்பு

March 15, 2026

போதைப்பொருள் அடங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் உரமூடைகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டுப் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

GMOA

அரச வைத்திய அதிகாரிகள் அவசர கோரிக்கை

March 15, 2026

QR முறையின் கீழ் வழங்கப்பட முன்மொழியப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு எவ்வகையிலும் போதுமானதல்ல என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

arr

இறைச்சிகளைக் கடத்திச் சென்ற இருவர் கைது

March 15, 2026

பொத்துவில், பானமை – சாஸ்திரவேல பகுதியில் கார் ஒன்றில் மான் மற்றும் காட்டெருமை (குளுமாடு) இறைச்சிகளைக் கடத்திச் சென்ற இரு

pon

’பொன் அணிகளின் போர்’: சமர் சமநிலையில் நிறைவு

March 15, 2026

‘பொன் அணிகளின் போர்’ என வர்ணிக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணிகளுக்கு இடையிலான