நாட்டின் பொது திறைசேரியை சூறையாடி தமது அரசியல் தலைமையகத்தை நிரப்புகிறது அரசாங்கம்

தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொது திறைசேரியை சூறையாடிக்கொண்டு, தமது அரசியல் தலைமையகமான பெலவத்தையின் கணக்குகளை நிரப்பி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதன்கிழமை (25) பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், நெருக்கடிகள் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கமும் கவர்ச்சிகரமான வார்த்தைகளையும் பொய்களையும் பயன்படுத்தி, அந்தப் பழிபாவங்களை மக்கள் மீது சுமத்திவிட்டு தீர்வின்றி தவிக்க விடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது ஆற்றிய உரைகளுக்கும், இன்று அவர் வகிக்கும் ஜனாதிபதி பதவியின் செயற்பாடுகளுக்கும் இடையில் பாரிய முரண்பாடு காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

மக்கள் இன்று இந்த முரண்பாட்டால் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். அன்று 3 வீதமாக இருந்த ஜே.வி.பி-யின் வாக்கு வங்கியை 42 வீதமாக உயர்த்த அவர்கள் கையாண்ட ஒரே உத்தி, முந்தைய ஆட்சியாளர்கள் மீது மக்கள் மத்தியில் குரோதத்தையும் வெறுப்பையும் விதைப்பதுதான். தற்போதைய நெருக்கடிகளுக்கு யுத்தம் அல்லது இயற்கைச் சீற்றங்களை அரசாங்கம் காரணமாகக் காட்ட முயன்றாலும், நிர்வாகத் திறமையின்மை, அகங்காரம், பொய் மற்றும் முறையற்ற மேலாண்மை ஆகியவையே தற்போதைய மக்களின் துயரங்களுக்குக் காரணம் என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

அரசாங்கம் பொருளாதார இலக்குகளை எட்டிவிட்டதாகவும், திறைசேரி நிரம்பி வழிகிறது என்றும், கடந்த ஆண்டே அதிக வரி வசூலிக்கப்பட்ட ஆண்டு என்றும் பெருமை பேசுகிறது.

அவ்வாறாயின், தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளின்படி உணவு, மருந்து, கல்வி உபகரணங்கள் மற்றும் எரிபொருட்களுக்கான வரிகளைக் குறைத்து மக்களுக்கு ஏன் நிவாரணம் வழங்க முடியாது என அவர் கேள்வி எழுப்பினார்.

தேர்தல் மேடைப் பேச்சுகளுக்கும் நடைமுறைக்கும் இடையில் வானத்திற்கும் பூமிக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது. 76 வருடங்களாக நாட்டைப் பிரபுத்துவ வர்க்கமே சீரழித்தது எனக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று ஏழை எளிய மக்களை சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாக்குவது ஏன் என்றும் அவர் வினவினார்.

மின்சார நெருக்கடி குறித்துப் பேசிய அவர், இது யுத்தத்தால் ஏற்பட்டதல்ல, நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற ஊழல்களே இதற்குக் காரணம் என்றும், அதன் சுமையை மக்கள் இன்னும் எரிபொருள் விலையின் ஊடாகச் சுமந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் சம்பூர் மின் உற்பத்தி நிலையம், திருகோணமலை எண்ணெய் டாங்கிகள் புனரமைப்பு மற்றும் எல்.என்.ஜி மின் நிலையத் திட்டங்கள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்தி, நாட்டின் எரிசக்தித் துறையைச் சீரழித்த பெருமை ஜே.வி.பி-யையே சாரும் எனக் குற்றம் சாட்டினார்.

அமைச்சர்களான ஹந்துன்னெத்தி மற்றும் சதுரங்க அபேசிங்க ஆகியோரின் அண்மைய கருத்துக்களைச் சாடிய அவர், மக்களுக்கு துணி துவைப்பதற்குக் கூட வழியில்லாத நிலையை இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளதாகவும், வெறும் மேடைப் பேச்சுகளால் மாத்திரம் நாட்டை ஆள முடியாது என்பதை அரசாங்கம் இப்போது உணர்ந்துள்ளதாகவும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

yoshitha-rajapaksa

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை நிராகரித்தது மேல் நீதிமன்றம்

May 14, 2026

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு தொடர்பாகப் பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை (Preliminary objection) கொழும்பு மேல்

Screenshot 2026-05-14 115508

அதிமுகவில் உச்சகட்ட மோதல்! ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு; ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள

p-sanmugam

“100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ல் சமாதி!” – பாஜக அரசின் புதிய திட்டத்தை சாடிய பெ. சண்முகம்!

May 14, 2026

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) வரும் ஜூன் 30-ஆம்

3

“தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி

May 14, 2026

சென்னை: “தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” எனத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு

collage-down-1714447028

சிறார்கள் கையில் மதுவா? – 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! டாஸ்மாக் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

1778468918-6452

“லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது!” – நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முதல்வர் விஜய் அதிரடி அறிக்கை!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு

1500x900_834373-kb-munusami

“பதவி எனும் துண்டுக்காக கழகம் எனும் வேட்டியைக் கழற்றாதீர்கள்!” – சி.வி.சண்முகம் தரப்பிற்கு கே.பி. முனுசாமி கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சி.வி. சண்முகம் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து,

free

“சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்; அரசு வேலை வழங்கு!” – சுடப்பட்ட மணிகண்டன் மனைவி தூத்துக்குடியில் ஆவேசப் பேட்டி!

May 14, 2026

தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரால் சுடப்பட்ட மணிகண்டனுக்கு நீதி கேட்டு, அவரது மனைவி பொன்மணி தூத்துக்குடியில்

Screenshot 2026-05-13 143435

“திமுக-வின் வாக்குகளைக் காட்டித்தான் நீங்கள் முதல்வர்!” – விஜய் அறிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதிலடி!

May 14, 2026

சென்னை: “திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எங்களது வெற்றி” என முதலமைச்சர்

1200-675-26672389-thumbnail-16x9-shan

“எங்களை நீக்க எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை!” – அதிமுக பிளவு குறித்து சி.வி.சண்முகம் அனல் பறக்கும் பேட்டி!

May 14, 2026

சென்னை: தவெக-வுக்கு ஆதரவு அளித்ததற்காகத் தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையாகக் கட்சிப் பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர்

keerthana-4-2026-05-14-06-26-38

“நானும் ஒரு மாற்றுத்திறனாளியின் மகள்தான்!” – சர்ச்சைப் பேச்சுக்கு தவெக அமைச்சர் கீர்த்தனா உருக்கமான மன்னிப்பு!

May 14, 2026

சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்துத் தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ்

amulmilkhike-1778683475

அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு! இன்று முதல் புதிய விலை அமல்; பொதுமக்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அமுல் பால் பாக்கெட்டுகளின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி குஜராத் கூட்டுறவு பால்