நாட்டின் பொக்கிஷமான சிறுவர்களை பாதுகாப்பது அரசின் கடமை – ஜனாதிபதி

சிறுவர்கள் நாட்டின் பொக்கிஷம் என்பதால் அவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

வாழ்விற்கு பலம் வீட்டு உதவித் திட்டத்தின் மூலம் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வளரும் பிள்ளைகளின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் நோக்கில், பாதுகாப்பான இல்லத்திற்காக கடந்த வருடம் ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டதுடன், இவ்வாண்டு அத்தொகை இரண்டு மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

குறித்த தொகை போதுமானதாக இல்லாவிட்டால் மேலதிக நிதி ஒதுக்கீடுகளைச் செய்யத் தாம் தயாராக இருப்பதாகவும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் செயல்படுத்தப்படும் வாழ்விற்கு பலம் வீட்டு உதவித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் நேற்று (17) கலந்துகொண்ட போது, ​​ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் இருந்து சமூகமயப்படுத்தப்படும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கும், பாதுகாப்பற்ற மற்றும் அதிக ஆபத்தான சூழ்நிலையில் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட சிறுவர்களுக்காகவும் வீடுகளை நிர்மாணிப்பதற்கு இரண்டு மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுவதுடன், இன்றைய தினம் மேல் மாகாணப் பயனாளிகளுக்கு அந்த நிதி உதவி வழங்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

வாழ்விற்கு பலம் வேலைத்திட்டம் என்பது நமது நாட்டின் முக்கியமானதொரு துறையின் ஆரம்பமாகும். சிறுவர்கள் என்பவர்கள் நாட்டின் பொக்கிஷம். நமது நாட்டில் பெற்றோரின் அரவணைப்பில் வளரும் பிள்ளைகளும் உள்ளனர். தாய், தந்தை அல்லது தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளரும் பிள்ளைகளும் உள்ளனர்.

அவ்வாறில்லையெனில், சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வளரும் பிள்ளைகளும் உள்ளனர். இவ்வாறு பல்வேறு இடங்களில் நமது பிள்ளைகள் வளர்கிறார்கள். எங்கு, எவ்வாறான சூழ்நிலையில் வாழ்ந்தாலும் அவர்கள் நமது பிள்ளைகளே.

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு பிணைப்பு உள்ளது. அவர்கள் தமது பிள்ளைகளின் வாழ்க்கையைச் சிறப்பிக்கவும், அவர்களைப் பாதுகாக்கவுமே முயல்கிறார்கள்.

அதுபோலவே, சமூகத்திற்கும் பிள்ளைகளுக்கும் இடையேயும் ஒரு தொடர்பு உள்ளது. சமூகம் எப்போதும் பிள்ளைகளுக்குச் சிறந்த பாதுகாப்பினை வழங்க முற்படுகிறது. அரசாங்கத்திற்கும் பிள்ளைகளுக்கும் இடையேயும் ஒரு பிணைப்பு உள்ளது.

அரசாங்கம் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அதற்குப் பொருத்தமான சூழலை உருவாக்குவதற்கும் செயற்படுகிறது. அது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

1956 ஆம் ஆண்டு முதல் சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டிருந்தாலும், 1998 ஆம் ஆண்டில்தான் அதன் செயற்பாடுகள் பூர்த்தியடைந்தது. எனினும், பிள்ளைகளை தொழிலில் ஈடுபடுத்துவதன் மூலம் மாத்திரம் அவர்களின் வாழ்க்கை பாதுகாப்பற்றதாக மாறவில்லை.

இன்னும் பல துறைகளினூடாக அவர்கள் இன்னல்களுக்கு ஆளாகினர், பாதுகாப்பற்ற தன்மையை எதிர்கொண்டனர். எனவே, இன்னும் பல துறைகள் ஊடாக நாம் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் இருக்கும் பிள்ளைகள் சமூகத்துடன் இணைக்கப்படும் போது அவர்களுக்கு ஏதாவது ஒரு நிதிச் சேமிப்பும், தமக்கென ஒரு சொத்தும் வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், இந்த நிலையங்களில் இருக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்கி, ஒவ்வொரு மாதமும்அந்தக் கணக்கில் 5000 ரூபா தொகையை வைப்புச் செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்தோம்.

சமூகத்திற்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவும் பலவீனமடைந்து வருகிறது. பிள்ளையைப் பிள்ளையாகப் புரிந்துகொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அது எமது பொறுப்பாகும் என தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2026-09-19 at 1.42.43 AM

முதல்வர் விஜய் மீது பாயும் விமர்சனங்கள் !

September 18, 2026

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் லண்டன் முதலீட்டுப் பயணம் தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பல்வேறு

WhatsApp Image 2026-09-19 at 1.38.21 AM

“அவன் செய்தது தவறுதான்… மன்னித்து விடுங்கள்” – மகனுக்காக கண்ணீர் சிந்தும் தாய்!

September 18, 2026

சவூதியில் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தனது மகனை விடுதலை செய்து, தாயகம் அழைத்து வர உதவுமாறு, அம்பாறை

WhatsApp Image 2026-09-19 at 1.35.44 AM

அவுஸ்திரேலியாவில் திடீர் பரபரப்பு – கடலில் ஆபத்து

September 18, 2026

மேற்கு அவுஸ்திரேலியாவில் கடலில் நீந்திக் கொண்டிருந்த ஒருவர் சுறா மீன் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்

WhatsApp Image 2026-09-19 at 1.27.35 AM

சிறீதரனை சந்தித்த ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர்!

September 18, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சிவஞானத்தை சந்தித்து

WhatsApp Image 2026-09-19 at 1.27.31 AM

கிளிநொச்சியில் அடுத்தடுத்து வாள் வெட்டு!

September 18, 2026

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள்

WhatsApp Image 2026-09-19 at 1.21.57 AM

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் – பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

September 18, 2026

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டது எனக் குற்றஞ்சாட்டி, அங்கிருந்த ஒலிபெருக்கிச் சாதனங்களை யாழ்ப்பாணம் பொலிஸார் பறிமுதல்

IMG_8246

எரிபொருள் விலை நெருக்கடி… 500 நிலையங்கள் ஆபத்தில்!

September 18, 2026

இலங்கையில் வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களின் விநியோக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக

IMG_8245

இரட்டைவேடம் போடும் அர்ச்சுனா எம்.பி..!

September 18, 2026

உதவி செய்யும் போது நல்லவராகத் தெரிந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, எதிர்க்கட்சிக் களத்தில் இணைந்த பின்னர் தமிழினப் பிரிவினைவாதத்திற்கு எதிரான

IMG_8244

சிறையில் வாடும் நாமலுக்கு இந்திய அரிசிடமிருந்து அழைப்பு..

September 18, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கையில், இந்திய அரசின் அழைப்பு மற்றும் திட்டமிடப்பட்ட பௌத்த மத சடங்கு ஆகியவை

Anura-Kumara-Dissanayake

நாட்டின் பொக்கிஷமான சிறுவர்களை பாதுகாப்பது அரசின் கடமை – ஜனாதிபதி

September 18, 2026

சிறுவர்கள் நாட்டின் பொக்கிஷம் என்பதால் அவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

vila

லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக பிரமாண்ட கங்கை ஆரத்தி விழா

September 18, 2026

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள புகழ்பெற்ற தேம்ஸ் நதிக்கரையில், இந்திய பாரம்பரியத்தின் அடையாளமான கங்கை ஆரத்தி விழா முதன்முறையாக மிகப்

dailythanthi_2026-09-18_8awoin9a_miruthula

“பெண் தலைவர்களுக்கு எதிரான அவதூறு பிரசாரத்தை உடனடியாக நிறுத்துங்கள்!” – சமூக வலைதளத் தாக்குதல்களுக்கு எதிராக சிபிஎம் கண்டனம்

September 18, 2026

சென்னை: இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) மாநிலத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மத்திய சென்னை மாவட்டக்குழு உறுப்பினருமான