நாட்டின் கடல் எல்லை வருமானம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பு குறித்து…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்றைய தினம் கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போது, நாட்டின் கடல் எல்லை வருமானம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பு குறித்து பல முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.

இலங்கையின் கடல் எல்லைப் பகுதியில் தற்போது 8 சதவீதமாக உள்ள ‘வெள்ளை வலயத்தை’ (White Zone) 23 சதவீதம் வரை அதிகரிப்பதற்கான உடன்படிக்கை ஒன்று 2023 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். தெற்கு மற்றும் தென்மேற்கு கடற்கரைப் பகுதியில் காணப்படும் ‘கோபால்ட்’ (Cobalt) எனப்படும் பெறுமதிமிக்க கனிம வளத்தின் முக்கியத்துவம் காரணமாகவே இந்த நடைமுறைப்படுத்தல் தாமதிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

இலங்கைக் கடல் எல்லையை கடந்து செல்லும் கப்பல்களிடமிருந்து அறவிடப்படும் வருமானம் தற்போது இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் செல்வதாகவும், இதன் காரணமாக இலங்கைக்கு ஆண்டுதோறும் சுமார் 51 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமான இழப்பு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாரா (NARA) நிறுவனம் ஆழ்கடல் அளவீட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு சுமார் 7 இலட்சம் அமெரிக்க டொலர்களை கோரியுள்ள போதிலும், அந்த முதலீட்டை செய்யாமல் ஆண்டுதோறும் 51 மில்லியன் டொலர் வருமானத்தை நாடு இழந்து வருகின்றது. இந்த உபகரணத்தை உடனடியாக கொள்வனவு செய்து, கப்பல் போக்குவரத்தின் ஊடாகக் கிடைக்கும் வருமானத்தை நாட்டுக்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கல்வி மறுசீரமைப்பு குறித்து கருத்துத் தெரிவித்த விஜேதாச ராஜபக்ஷ, 2027 ஆம் ஆண்டு கல்வி மறுசீரமைப்புகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பது ஒரு கட்டுக்கதை எனத் தெரிவித்தார். பாடப்புத்தகங்களை டிஜிட்டல் மயப்படுத்துவது உண்மையான கல்வி மறுசீரமைப்பு அல்ல என அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் ஒவ்வொரு மாணவரிடமும் ஸ்மார்ட்போன் இருப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை என்றும், மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்தும் போது கல்விச் சார்ந்த தளங்களை மட்டும் அணுகுவார்களா? என்பது கேள்விக்குறி என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகள் மாணவர்களின் பாதுகாப்பிற்காக ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சட்டங்களை உருவாக்கி வரும் நிலையில், இலங்கையில் மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் சட்டங்கள் கொண்டுவரப்படுவதாக அவர் சாடினார்.

கல்வி மறுசீரமைப்பிற்கு முன்னதாக அரசாங்கத்தை மறுசீரமைக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இந்தத் திட்டத்திற்கு எதிராக இருப்பதாகவும், இது அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு அல்ல, மாறாகத் தமது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்றும் கூறினார். மக்கள் கருத்தைப் பெற்று, எதிர்க்கட்சிகள் மற்றும் மகா சங்கத்தினருடன் கலந்தாலோசித்து சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமே தவிர, தன்னிச்சையாகச் செயல்படுவது நாட்டுக்கு ஆபத்தானது என அவர் மேலும் எச்சரிக்கை விடுத்தார்.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்