நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பு

ட்ரோன்களை (Drone)பயன்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான உணர்திறன் மிக்க தகவல்களைச் சேகரித்தல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:

ட்ரோன்களை பயன்படுத்தி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்திற்கொண்டு, அத்தகைய நிலைமைகளைத் தடுப்பதற்குத் தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பது காலத்தின் தேவை என இலங்கை பொலிஸாரால் அவதானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் ட்ரோன் அல்லது மனிதரற்ற வான்வழி ஊர்திகளை இறக்குமதி செய்தல், வர்த்தகம் செய்தல் மற்றும் இயக்குதல் போன்றவை 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு செய்யப்பட வேண்டும்.

இருப்பினும், சில நிறுவனங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இத்தகைய ஊர்திகளை இறக்குமதி செய்வதாகவும், அவற்றின் உதிரிப்பாகங்களை விற்பனை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, ட்ரோன்கள் மற்றும் அதன் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், விற்பனை செய்யும் வணிக நிலையங்கள் மற்றும் பழுதுபார்க்கும் நிலையங்களை நடத்துவோர், 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு செயற்படுகிறார்களா? என்பது குறித்து இலங்கை பொலிஸார் அவதானம் செலுத்துமாறும், இது தொடர்பான தரவுகளைப் பேணுமாறும் பொலிஸ்மா அதிபரால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

irds

சிறைபிடிக்கப்பட்ட ஈரான் கப்பல்: 06 மாலுமிகள் விடுதலை; 22 பேர் தடுப்பில்!

April 30, 2026

அமெரிக்கக் கடற்படையினரால் ஓமன் வளைகுடாவில் சிறைபிடிக்கப்பட்ட ஈரானிய சரக்குக் கப்பலில் இருந்த 06 மாலுமிகள் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளதாக ஈரானின்

dru

சந்திரனைச் சுற்றி வெற்றிகரமாகத் திரும்பிய ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்களை வெள்ளை மாளிகையில் வரவேற்றார் ட்ரம்ப்

April 30, 2026

சந்திரனைச் சுற்றி வந்து வெற்றிகரமாகத் திரும்பிய ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் புதன்கிழமை வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில்

dci

அரசாங்கத்திற்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு

April 30, 2026

அரசாங்கத்திற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் அபிமானி ஜன ஜய கட்சி இன்று (30) வியாழக்கிழமை முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதுடன், அமெரிக்காவுக்கு

epd

தன்னை ஒரு புனிதராகக் காட்டவே பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முயற்சிக்கின்றார்

April 30, 2026

தனக்கு எதிரான விமர்சனங்களையும் குற்றங்களையும் மறைப்பதற்கும், தன்னை ஒரு புனிதராகக் காட்டுவதற்குமே பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முயற்சிக்கின்றார். அதன்

jud

ஊழல் வழக்குத் தீர்ப்பு ஒத்திவைப்பு

April 30, 2026

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு

minnal

மின்னல் குறித்த எச்சரிக்கை

April 30, 2026

நாட்டின் 11 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையானது

ukt

உக்ரைன் போர் நிறுத்த அறிவிப்பு

April 30, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோர் நேற்று (29) சுமார் 90 நிமிடங்கள்

sana

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி ஒன்றை வாகரையில் அமைக்க ஆலோசனை!

April 30, 2026

வாகரைப் பிரதேசத்தில், தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவு நேற்று (29) முன்வைக்கப்பட்டது. இந்த

parliment

2.5 மில்லியன் அமெரிக்க டாலர் சைபர் சம்பவம்: நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க நிதியமைச்சு முடிவு

April 30, 2026

காணாமல் போனதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் விவகாரம் தொடர்பாக, நிதியமைச்சு மே மாதம் 5 ஆம் திகதி

seeman

தமிழர்களின் இன ஓர்மையை சிதைக்கும் இலங்கை இனவாத அரசின் சதியை இருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்!-சீமான்

April 30, 2026

தமிழர்களின் இன ஓர்மையை சிதைக்கும் இலங்கை இனவாத அரசின் சதியை இருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்என நாம்

thyity1

அதிகாரிகளின் வார்த்தைகளை நம்பத் தயாரில்லை”: தையிட்டி காணி விவகாரத்தில் உரிமையாளர்கள் காட்டம்!

April 30, 2026

அதிகாரிகளின் வார்த்தைகளை நம்பத் தயாரில்லை”: தையிட்டி காணி விவகாரத்தில் உரிமையாளர்கள் காட்டம்! யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள

iran

இலங்கை கிரிக்கெட் மாற்றக் குழுவின் தலைவராக எரான் விக்ரமரத்ன நியமனம்: புதிய யாப்பு மற்றும் மறுசீரமைப்பு குறித்து அறிவிப்பு

April 30, 2026

இலங்கை கிரிக்கெட் (SLC) மாற்றக் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எரான் விக்ரமரத்ன, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும்