ஒட்டாவா அருகே உள்ள கிராமப்புற மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் (Emergency Departments) நிலவும் கடும் நெரிசலைக் குறைக்கும் வகையில், புதிய ‘நடமாடும் மருத்துவச் சேவையகம்’ ஒன்று தனது சேவையைத் தொடங்கியுள்ளது.
கெம்ப்ட்வில் மாவட்ட மருத்துவமனை (KDH) மற்றும் மேற்கு ஒட்டாவா ‘ஹார்ட் ஹப்’ (West Ottawa HART Hub) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்தப் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளன.
போதைப்பொருள் பழக்கம் மற்றும் வீடற்ற நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான சிறப்புச் சிகிச்சைகளை நேரடியாக வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
ஒட்டாவாவின் முக்கியப் பகுதியிலிருந்து தொலைவில் உள்ள கெம்ப்ட்வில் போன்ற வளர்ந்து வரும் பகுதிகளில், மனநலம் மற்றும் போதைப்பொருள் மீட்புக்கான வசதிகள் குறைவாகவே உள்ளன.
இதனால், இங்குள்ள மக்கள் பெரும்பாலும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவையே நம்பியிருக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.