ன்னை
பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து, மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து விரிவாக்கம் மற்றும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட சட்டமன்ற அறிவிப்புகளை வரவேற்று, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
பரந்தூர் திட்டம் ரத்து & புதிய இடம் தேர்வு:
-
“சென்னையின் 2-வது விமான நிலையத் திட்டத்தால் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடி வந்தனர்.”
-
“மக்களின் போராட்டத்தை ஏற்று, த.வெ.க. தேர்தல் வாக்குறுதியின்படி பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. குடியிருப்புகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு இல்லாத தகுந்த மாற்று இடத்தை அரசு உடனடியாகத் தேர்வு செய்து, பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.”
விலையில்லா எரிவாயு சிலிண்டர் திட்டம்:
-
“ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில், முதற்கட்டமாக ரூ.2.5 லட்சம் வரை வருமானம் உள்ள குடும்பங்களுக்குப் பொங்கல் முதல் 3 சிலிண்டர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்ற அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவிக்கிறோம்.”
-
“அதேநேரத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தி, வாக்குறுதி அளித்தபடி முழுமையாக 6 சிலிண்டர்களையும் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
‘வெற்றிப் பயணம்’ மகளிர் பேருந்து திட்டம்:
-
“மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் வரும் அக்.2 முதல் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ் மற்றும் டீலக்ஸ் பேருந்துகளுக்கும், புறநகர் மற்றும் மலைப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு பாராட்டுக்குரியது.”
-
“வருமான உச்சவரம்போ, பயணக் கட்டுப்பாடுகளோ இன்றி இத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு முழு மனதுடன் வரவேற்கிறது.”
#CPI #MVeerapandian #ChiefMinisterVijay #TVKGovernment #ParandurAirport #FreeLPG #VetriPayanam #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates