சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது கட்சி வேட்பாளர்களுடன் மிக முக்கியமான ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார். கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், தவெக சார்பில் போட்டியிட்ட 233 தொகுதி வேட்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 1 மணி அளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்குகிறது.
இந்தக் கூட்டத்திற்கு வரும் வேட்பாளர்கள் அனைவரும், அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்ட ‘17C’ ஒரிஜினல் படிவங்களைக் கட்டாயம் கையோடு கொண்டு வர வேண்டும் என்று தலைமை அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகளின் துல்லியமான எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் இந்த ஆவணங்களின் அடிப்படையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதியன்று மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முகவர்களுக்கான அறிவுரைகளை விஜய் வழங்க உள்ளதாகத் தெரிகிறது. முதன்முறையாகத் தேர்தலைச் சந்தித்துள்ள தவெக, வாக்கு எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படத் திட்டமிட்டுள்ள நிலையில், விஜய்யின் இந்த ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
#TVK #ThalapathyVijay #TNElection2026 #VijayConsultation #PanaiyurOffice #17CForm #ElectionResults #May4 #VijayForCM #TamilPolitics #BreakingNews #CountingDayPreparation #VijayTVK #ChennaiNews #PoliticalStrategy #VictoryHopes #April30