பாசறைபாணர் தேனிசை செல்லப்பாவின் உடலுக்கு நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார்
இது குறித்து சீமான் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளதாவது


தமிழ்த்தேசியத் தலைவரின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்ற பெருந்தகை. தம்முடைய எழுத்து, இசை, குரல் என்று யாவற்றையும் தாயக விடுதலைக்கு ஒப்புவித்து, வாழ்நாள் முழுவதும் தமிழ் மண்ணிற்கும், மக்களுக்காகவுமே வாழ்ந்து மறைந்த போற்றுதற்குரிய பெருமகன், பாசறைப் பாணர் அப்பா தேனிசை செல்லப்பா அவர்கள் மறைவெய்தியதையடுத்து இன்று 28-04-2026 பிற்பகல் படப்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று இறுதி வணக்கம் செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.