தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) நேற்று முற்பகல் (16) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) 2026–2030 என்பது, நாட்டின் ஏற்றுமதித் துறையை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சியை அடைதல் ஆகிய நோக்கங்களுடன், 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்தின் கொள்கை வழிகாட்டுதலுக்கு இணங்க வகுக்கப்பட்ட ஒரு முக்கிய தேசியத் திட்டமாகும்.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டுதல் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB) தலைமையின் கீழ், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) கொள்கை அடிப்படையிலான கடன் (PBL) திட்டம் வழங்கிய தொழில்நுட்ப உதவியுடனும் இ

ந்த மூலோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், முக்கிய அரசாங்க நிறுவனங்கள், தனியார் துறை பங்குதாரர்கள் மற்றும் அபிவிருத்தி பங்காளிகளுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட விரிவான கலந்தாய்வு செயல்முறையின் விளைவாகும்.

இலங்கையின் ஏற்றுமதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் மேம்படுத்துவதற்குமான உத்தியோகபூர்வ மூலோபாயக் கட்டமைப்பாக இத்திட்டத்தை (2026-2030) அங்கீகரிப்பதற்காக, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு, 2026 மே 4 ஆம் திகதி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. இத்திட்டமானது அரசாங்க நிறுவனங்கள், தனியார் துறை வல்லுநர்கள் மற்றும் சர்வதேச அபிவிருத்திப் பங்காளர்களின் பொதுவான இணக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இலங்கையின் ஏற்றுமதிப் போட்டித்திறனை மேம்படுத்தவும், 2030-ஆம் ஆண்டிற்குள் 36 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாய் இலக்கை அடையவும் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இலங்கையை பிராந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளுக்குச் சேவை வழங்கும் போட்டித்தன்மைமிக்க விநியோகச் சங்கிலி (Logistics) மற்றும் அறிவு சார்ந்த ஏற்றுமதி மையமாக மாற்றுவதே இதன் முதன்மையான தொலைநோக்காகும். இந்த மூலோபாயத் திட்டம், ‘கிடைமட்டத் துறைகள்’ (Horizontals) மற்றும் ‘முன்னுரிமைத் துறைகள்’ (Verticals) ஆகிய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரண்டு முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டதுடன், இதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதிப் போட்டித்தன்மையை வலுப்படுத்துவதற்கும், பன்முகப்படுத்துவதற்கும் மற்றும் நிலையான வளர்ச்சிக்கும் தேவையான அடித்தளம் அமைக்கப்படுகிறது.

அனைத்து முன்னுரிமைத் துறைகளின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் ஆதரவளிப்பதற்குத் தேவையான அடித்தளத்தை வழங்கும் கிடைமட்டத் துறைகளுக்குள் (Horizontals),வர்த்தகச் சங்கிலி (Logistics) மற்றும் ஒருங்கிணைந்த மைய செயல்பாடுகள், வர்த்தக வசதிகளை வழங்குதல், வர்த்தக நிதி மற்றும் வணிக மற்றும் முதலீட்டுச் சூழல்களின் சீர்திருத்தங்கள், வர்த்தக ஊக்குவிப்பு மற்றும் சந்தை உறவுகள், தர முகாமைத்துவம், தரநிலைகள், சூழல், சமூகம் மற்றும் ஆளுமை (ESG) திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கங்கள் ஆகியவை அடங்குகின்றன.

ஏற்றுமதி பன்முகப்படுத்தல் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தியை அதிகரித்தல், உலகளாவிய சந்தையில் இலங்கையை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக நிலைநிறுத்துதல் ஆகியவற்றிற்காக மோட்டார் வாகன உதிரிபாகங்கள், கனிம அடிப்படையிலான தொழிற்துறைகள், இறப்பர் சார்ந்த கைத்தொழில்கள், கடல்சார் கைத்தொழில்கள் (படகு மற்றும் கப்பல் தயாரித்தல் உட்பட), மசாலாப் பொருட்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட பொருட்கள், டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் சேவைகள், மின் மற்றும் மின்னணு உதிரிப்பாகங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்கள் ஆகிய எட்டு (08) முன்னுரிமை ஏற்றுமதித் துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த தேசியத் திட்டத்தைத் தயாரிப்பதில் அரச நிறுவனங்கள், தனியார் துறை, சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட தரப்பினரின் பங்களிப்பு பெறப்பட்டுள்ளது. 2025 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் 2026 ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட செயலமர்வுகள் மூலம் இதற்கான பரந்த பொதுவான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

வலுவான நிர்வாக மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பின் ஆதரவுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், உள்நாட்டு உற்பத்திகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும், நாட்டின் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டமானது, இலங்கை பொருளாதாரத்தின் புதிய முன்னோடியாக எதிர்காலத்தில் செயல்படும்.

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்