வலி வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட தெல்லிப்பளைப் பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட சட்டவிரோத வைத்தியசாலையை உடன் அகற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இராணுவத்தினால் மக்களுடைய காணிகளை அபகரித்து அதில் இராணுவ வைத்தியசாலையை அமைத்ததென்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
பொதுமக்களின் காணிகளைப் பொதுமக்களுக்கே வழங்கப்படும் என கூறும் அரசாங்கம் இதற்கு என்ன பதில் கூறப்போகிறது?
எனவே குறித்த வைத்தியசாலையை உடன் அகற்ற இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.