திருவள்ளுவர் சிலை தென் கொரியாவில் திறப்பு

​கொரியத் தமிழ்ச் சங்கம், கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம் மற்றும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய ‘முதலாம் பன்னாட்டு இந்திய – தமிழ் – கொரிய ஆய்வு மாநாடு 2026’, கொரியத் தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கும் விழா மற்றும் வி.ஜி.பி.

உலகத் தமிழ்ச் சங்கத்தின் 205-ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள், தென் கொரியாவின் டேஜான் (Daejeon) நகருக்கு அருகிலுள்ள ஓசோங் (Osong) அரங்கில் அண்மையில் கோலாகலமாக நடைபெற்றன.​இதுவரை உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் 204 திருவள்ளுவர் சிலைகளை நிறுவியுள்ள வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் செவாலியர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் அவர்கள், 205-ஆவது திருவள்ளுவர் சிலையினைத் தென் கொரிய மண்ணில் திறந்து வைத்தார்.​

இவ்விழாவில், தென் கொரியாவிற்கான இந்தியத் தூதரக அதிகாரி சுரேஷ் குமார், சுங்சொங்புக்தோ பயோ சி.எஸ். மையத்தின் தலைவர் புரவலர் லியூ ஜெ யொங், சுங்ஜூ மாகாணக் கல்வியாளர் கிம் தோக்யோ, மேனாள் இலண்டன் மேயர் அப்பு தாமோதரன், சென்னையின் புகழ்பெற்ற மருத்துவர் சொக்கலிங்கம், பேராசிரியர் உலகநாயகி பழனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.​

மேலும், கொரியத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் அரவிந்த ராஜா, நிறுவனத் தலைவர் முனைவர் இராமசுந்தரம், முனைவர் மோ. பாட்டழகன், துணைத் தலைவர் தெ. விஜயலட்சுமி, பொருளாளர் பீ. ஜெரோம், செயலாளர் முனைவர் செலஸ்டின் ராஜா, இந்தியத் தொடர்பாளர் முனைவர் பிரபாகரன் ஆகியோருடன் பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.​இந்நிகழ்வின் ஒரு பகுதியாக ஆய்வரங்கம், கலையரங்கம் மற்றும் மரபு நடைப்பயணம் ஆகியவையும் இடம்பெற்றன.​

விழாவில் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் உரையாற்றுகையில், “‘தொழில் செய்து தொண்டு செய்வோம்’ என்ற நோக்கில் உலகெங்கும் திருவள்ளுவர் சிலைகளை நிறுவி, தமிழ் மொழியினை வளர்த்து வருகின்றோம்.

இன்று 205-ஆவது சிலையினைத் தென் கொரிய மண்ணில் நிறுவுவதையெண்ணிப் பெருமை கொள்கிறேன். அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலைக் கொடுத்த வள்ளுவரது நெறிகளைக் கைக்கொண்டு, மதத்திற்கு அப்பாற்பட்ட பொதுமறையாகத் திருக்குறளைப் போற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டார்.​இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைச் சங்க நிர்வாகிகளும், பன்னாட்டுத் தொடர்பாளர் தாமோதரனும் இணைந்து சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.

sava

தந்தையும் 9 வயது மகனும் உயிரிழப்பு; சாவகச்சேரியில் விபத்து!

November 14, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் – பருத்தித்துறை வீதியின் கனகம்புள்ளியடி சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில்

image_2bf71ea038

பாடசாலைக் கல்விச் சான்றிதழ் சர்ச்சை : இந்தோனேசிய உப ஜனாதிபதி இராஜினாமா

November 14, 2026

தனது உயர்தரப் பாடசாலைக் கல்விச் சான்றிதழின் சட்டபூர்வத்தன்மை தொடர்பில் எழுந்த கடும் சர்ச்சைகளைத் தொடர்ந்து, இந்தோனேசிய உப ஜனாதிபதி கிப்ரான்

jud

நீதித்துறை சுயாதீனத்தை வலியுறுத்தித் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு

November 14, 2026

திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுடீன் வழங்கிய சட்டபூர்வப் பிடியாணை உத்தரவை விமர்சித்து, கௌரவ மன்றையும் நீதிபதியையும் அவமதிக்கும்

us

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் தடை நீக்கம்!

November 14, 2026

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்துத் தடை நீக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் போக்குவரத்துச் செயலாளர் ஷோன்

ss

தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் ரூ. 200 கோடி போதைப்பொருள்!

November 14, 2026

இலங்கைக்குத் தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஏற்றிய மீன்பிடிப் படகு நேற்று (13) காலி துறைமுகத்திற்குக்

teaf

ஆசிரியர் மீது மாணவன் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பார்ட்டம்

November 14, 2026

திருகோணமலை, அபயபுர பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், பாடசாலை நேரத்தின்போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, மாணவன் ஒருவனால் ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலில்

tho

’தேஹிபாலே மல்லி’ ஜோர்ஜியாவில் கைது

November 14, 2026

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் தென்பகுதியின் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான படபெந்தி மத்துமகே

th

திருவள்ளுவர் சிலை தென் கொரியாவில் திறப்பு

November 14, 2026

​கொரியத் தமிழ்ச் சங்கம், கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம் மற்றும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்

For em

ஏமாற்றப்பட்ட 40 இலங்கையர்களுக்கு உதவி?

November 14, 2026

சவூதி அரேபியாவில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 40 இலங்கைப் பணியாளர்களுக்கு, அவர்களுக்குரிய நிலுவைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக சுமார் 569

lau

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு

November 14, 2026

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய,

image_8ee04cb420

நாமலின் கிரிஷ் விசாரணை; இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை கோரல்

November 14, 2026

கிரிஷ் (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை, எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி

8

“திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் ரூ.2,200 கோடி ஊழல்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!

November 13, 2026

சென்னை: திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் பேட்ச் ஒர்க் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 2,200 கோடி ரூபாய் அளவுக்கு