சென்னை:
அதிமுக-வில் நிலவும் உட்கட்சி மோதல் தற்போது சந்தி சிரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை எம்.ஆர்.சி நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
“தமிழகத்தில் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. திருமாவளவனை முதலமைச்சராக்கலாம் என திமுக முன்மொழிந்தபோது, நாங்களும் அதற்குச் சம்மதித்தோம். ஆனால், ‘நான்தான் முதலமைச்சராகப் போகிறேன்’ எனக் கூறி எடப்பாடி பழனிசாமி அந்த வாய்ப்பைத் தடுத்தார். மேலும், திமுக-வுடன் ரகசியக் கூட்டணி வைத்துக்கொண்டு, பாஜக-வும் அதற்கு ஆதரவு என அவர் கூறி வந்தார். தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிக்கலாம் என்ற எங்கள் முடிவையும் அவர் ஏற்கவில்லை” என சி.வி. சண்முகம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக-வின் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு எஸ்.பி. வேலுமணிக்கே உள்ளது. எம்.எல்.ஏ-க்கள் சேர்ந்துதான் கொறடாவை நியமிக்க முடியும், பொதுச்செயலாளர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டது செல்லாத கடிதம். யாருக்குப் பதவி ஆசை என்பதை எடப்பாடி பழனிசாமி தனது மனசாட்சியைத் தொட்டுச் சொல்ல வேண்டும். திமுக-வின் எதிர்ப்பு அடிப்படையில் தான் நாங்கள் தவெக-வுக்கு ஆதரவு அளிக்கிறோம்” எனக் கூறி அதிர வைத்தார். சி.வி. சண்முகத்தின் இந்தப் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தையும், அரசியல் களத்தில் புதிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
#CVShanmugam #EPSvsSPV #AiadmkSplit #Thirumavalavan #VijayAsCM #TVK #BreakingNews #May13 #TamilNaduPolitics #PoliticalCrisis #EdappadiPalaniswami #Velumani #StalinVsVijay #DravidianPolitics #TN_Assembly #FortStGeorge #AllianceSecrets #VictoryForVijay #TamilNews #VijayMakkalIyakkam_