திருக்கோணமலை பிரகடனத்தை வலுப்படுத்தும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!

ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் – திருக்கோணமலை பிரகடனம் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அதனை மக்கள் மத்தியில் பரவலாக எடுத்துச் செல்லும் வழிமுறைகள் குறித்து ஆராயும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மட்டக்களப்பிலுள்ள அமெரிக்கன் சிலோன் மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.

ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டம், மட்டக்களப்பு கிழக்கு சிவில் சமூக செயல்பாட்டாளர்களின் ஒன்றியத் தலைவரும் ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் மாவட்ட செயற்பாட்டாளருமான ச.சிவயோகநாதனின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, திருகோணமலை பிரகடனத்தின் அடிப்படை நோக்கங்கள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான செயற்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் மாவட்ட மட்டத்திலும் பிராந்திய மட்டத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டிய விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர் அருட்பணி லூக்ஜோன் சிவில் சமூக பிரதிநிதிகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்ப் பொது வேட்பாளருமாகிய பா.அரியநேந்திரன் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள், திருக்கோணமலை பிரகடனத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான செயற்திட்டங்கள், மக்களிடையே அதன் அரசியல் மற்றும் சமூக முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நடவடிக்கைகள், மற்றும் ஒருங்கிணைந்த மக்கள் இயக்கத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்தனர்.

இறுதியாக, திருக்கோணமலை பிரகடனத்தின் இலக்குகளை அடைவதற்காக மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியான மக்கள் சந்திப்புகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்

Toronto-Election-1536x783

டொரன்டோ மேயர் தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில், வெறும் வாக்குறுதிகளைத் தாண்டி மேலதிகமானவற்றை எதிர்பார்க்கும் ஸ்கார்பரோ (Scarborough

October 12, 2026

டொரன்டோ மேயர் தேர்தலில் ஸ்கார்பரோ பகுதி ஒரு முக்கிய போர்க்களமாக உருவெடுத்து வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில்,

toronto mayor election

அக்டோபர் 26-ஐ முன்னிட்டு முக்கிய பிரச்சினைகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை வழங்கும் உள்ளூர் அமைப்புகள்

October 12, 2026

வரவிருக்கும் நகராட்சித் தேர்தலில் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. நீங்கள் வேட்பாளர்கள் மற்றும் முன்னணியில் உள்ள பிரச்சினைகள் பற்றி மேலும்

8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி:

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த