சென்னை:
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களுக்கு இத்திட்டம் பொருந்தும். தமிழர் பண்பாட்டு மரபில் தாய்மாமன் தன் உடன்பிறந்தாளின் குழந்தையை அன்புடன் வரவேற்கும் சீர் முறையை அடிப்படையாகக் கொண்டு, அரசு ஒரு தாய்மாமனாகப் பொறுப்பேற்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.
தமிழகத்தில் தாய்-சேய் நலனை மேம்படுத்தும் வகையில் ஏற்கனவே நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் PICME போன்ற திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ அரசு மருத்துவமனைகளின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ. 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள். இதற்கான ஒப்பந்தப் புள்ளிகளைக் கோர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் வருகையையும் கொண்டாடும் விதமாகவும், தாய்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும் இத்திட்டம் அமையும். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் தாய்-சேய் நலக் குறியீடுகள் மேலும் சிறப்படைய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
#ThaimamanThangaMothiram #CMVijay #TVK #Vijay #ThalapathyVijay #TvkGovernment #TamilNadu #TamilNews #BMNews #PublicWelfare #BreakingNewsTN #SofaModelGovernment #Politics2026 #MaternalCare #ChildWelfare #TamilNaduPolitics #HealthDepartment #TamilNaduNews #PositiveGovernance #Economy2026 #VijayGovernment #GovernmentScheme #TNPolitics #PoliticalNews #HealthCare #AdministrativeReform #GovernmentAccountability #PublicRepresentation #GoldRingScheme #WelfareScheme