கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு அம்மாவட்ட தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தனது செல்போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கலெக்டரின் கணவர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் கலெக்டர் தரப்பில் நடவடிக்கை கோரி புகார் தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு விசாரணை அதிகாரி நியமனம்:
இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சிறப்பு விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்.பி. சிருஷ்டி சிங்கையும், கண்காணிப்பு அதிகாரியாக ஐஜி காமினியையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
கலெக்டரிடம் நேரில் விசாரணை:
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் உள்ள பாதிக்கப்பட்ட பெண் கலெக்டரின் வீட்டிற்கு இன்று நேரில் சென்ற விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங், கலெக்டரிடம் விசாரணை நடத்தி அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
#Kallakurichi #TVKMLA #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive