சென்னை:
தவெக ஆட்சி அமைந்த 4 மாதங்களில் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மின் கொள்முதல் ஊழல்:
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில், “அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தத் தெரியாத அரசு, விலைவாசி உயரவே இல்லை எனப் பொய் சொல்கிறது. வெளிச்சந்தையில் ரூ.35-க்கு மின்சாரம் வாங்குவதில் நடைபெறும் ஊழல் பணத்தில்தான் அதிமுகவிலிருந்து 15 பேரை விலைக்கு வாங்கப் போகிறீர்களா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
குரங்குக் கூட்டம்:
“விவசாயிகளின் பேச்சைக் கேட்காமல் ஜோசியர் பேச்சைக் கேட்டு மேட்டூர் அணையைத் திறந்ததால் கடைமடை விவசாயிகள் பரிதவிக்கின்றனர். ரூ.5 கோடியில் தடுப்பு அமைத்து முதல்வர் ரீல்ஸ் எடுக்கிறார். வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் போலச் செயல்படும் தவெக அரசால் தமிழ்நாடு கண்முன்னே சீரழிகிறது,” என மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
#MKStalin #DMK #TVK #PowerScam #TNPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive