தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் நலனை உறுதிப்படுத்த பல முயற்சிகளைச் செய்கின்றது!

பாட்டாளி வர்க்கத்தின் வியர்வை, தியாகம், மற்றும் உழைப்பால் கட்டியெழுப்பப்பட்ட இந்த உலகில், தொழிலாளர்களின் நலன் குறித்து வெறும் வார்த்தைகளில் மட்டுமே பேசிக்கொண்டிருக்கவில்லை. அதை செயல்முறையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிரூபித்து வருகின்றது என மே தின வாழ்த்துச் செய்தியில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மே தின தினத்தை முன்னிட்டு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தொழிலாளர் நலனை உறுதிப்படுத்த பல்வேறு சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அவை வெறும் அரசியல் வாக்குறுதிகளாக அல்லாமல் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, இலங்கையின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பள உயர்வு, நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு நீதி வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட படிமுறையாகும்.

தலைமுறைகள் கடந்தும் உழைத்த அந்த மக்களின் குரல் இறுதியில் கேட்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது இந்த அரசின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகும்.

அதேபோல், நாட்டின் அந்நியச் செலாவணியின் முதுகெலும்பாக விளங்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடற்றொழிலில் ஈடுபடும் மக்களின் வாழ்க்கையும் மறக்கப்படவில்லை. கடலில் போராடும் அந்த உழைப்பாளிகளின் வாழ்வாதாரம், தொழில் பாதுகாப்பு மற்றும் சமூக நலன்களை மேம்படுத்தும் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் மே தினம், வெறும் நினைவுநாளாக அல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஒலிக்கும் போராட்ட மேடையாக அமையவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியால் நாடு முழுவதும் 21 இடங்களில் மே தினக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் வன்னி நிலப்பரப்பில் நடைபெறவுள்ள கூட்டங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

கடந்த காலங்களில் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராடியபோது, அவர்களை துப்பாக்கிச் சூடு, தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மூலம் ஒடுக்கியவர்கள் இன்று தொழிலாளர் நலன் குறித்து பேசுவது மிகப் பெரிய பரிகாசமாகும்.

அன்று தொழிலாளர்களின் குரலை அடக்கத் தோட்டாக்களைப் பயன்படுத்தியவர்கள், இன்று தம்மை மீட்பர்களாக காண்பிக்க முற்படுகின்றனர். இத்தகைய போலி வேடங்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது.

அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, உண்மையான தொழிலாளர் விடுதலையை நோக்கி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

உழைக்கும் மக்களின் கரங்கள் ஓங்கட்டும்! வியர்வையின் மதிப்பு உயரட்டும்! அனைத்துப் பாட்டாளி வர்க்கத்தினருக்கும் எனது செம் மேதின வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

Sanak

அரசாங்கம் பௌத்த துறவிகளைத் திருப்திப்படுத்துவதையே பிரதான நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது – சாணக்கியன்

May 1, 2026

அரசாங்கம் மக்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதை விட, பெரும்பான்மை சமூகத்தைப் பௌத்த துறவிகளைத் திருப்திப்படுத்துவதையே பிரதான நோக்காக

sin

சின்மயா மிஷனின் அமிர்த யாத்திரை; யாழ்ப்பாணத்தில் 10 இலட்சம் இளைஞர்கள் இலக்கு

May 1, 2026

சின்மயா மிஷனின் 75-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் “சின்மயா அமிர்த யாத்திரை” யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. சின்மயா மிஷனின் இளைஞர்

Chemma

பதின்ம வயதுடையவரின் எலும்புக்கூடு செம்மணியில் மீட்பு!

May 1, 2026

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நேற்று இடம்பெற்ற 4ஆம் நாள் அகழ்வுப் பணிகளின் போது, பதின்ம வயதுடைய ஒருவருடையது

sea

2010 தொடக்கம் 2026 ஏப்ரல் வரை 2,629 பேர் உயிரிழப்பிலிருந்து மீட்கப்பட்டனர்!

May 1, 2026

இலங்கையின் பல்வேறு கடற்கரைப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் (2026) மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உயிர்காப்பு நடவடிக்கைகளின் போது, நீரில் மூழ்கவிருந்த 19

fsfs

உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கு மக்கள் போராட்டம்!

May 1, 2026

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ”

Chand

தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் நலனை உறுதிப்படுத்த பல முயற்சிகளைச் செய்கின்றது!

May 1, 2026

பாட்டாளி வர்க்கத்தின் வியர்வை, தியாகம், மற்றும் உழைப்பால் கட்டியெழுப்பப்பட்ட இந்த உலகில், தொழிலாளர்களின் நலன் குறித்து வெறும் வார்த்தைகளில் மட்டுமே

tho

மந்தகதியில் இடம்பெறும் நித்தகைக்குளத்தின் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு ரவிகரன் பணிப்பு

May 1, 2026

மந்தகதியில் இடம்பெறும் நித்தகைக் குளத்தின் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் நித்தகைக்குளம் கமக்கார

va

தையிட்டி வீதித் தடை குறித்து விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

May 1, 2026

தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையை எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதிக்கு முன்பதாக அகற்றுமாறு வலிகாமம்,

dd

சர்வதேச தொழிலாளர் தினம்; கறுப்பு நாளாக முத்துநகர் விவசாயிகள் போராட்டம்!

May 1, 2026

திருகோணமலை – பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்துநகர் விவசாயிகள், சர்வதேச தொழிலாளர் தினமான இன்று (01.05.2026), கறுப்பு

ogfgzahouzuykr

May 1, 2026
ws98938
anu

இலங்கையில் முதன் முறையாக உழைக்கும் மக்களின் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி

May 1, 2026

மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சி அமையும் என ஜனாதிபதி

Bri

பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதல்?

May 1, 2026

பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டமானது எச்சரிக்கை நிலையில் இருந்து தீவிரம் என்ற நிலைக்கு, 4 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று (30)