தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இந்த விசேட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், எதிர்வரும் சனிக்கிழமை (14) கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 9ஆம் திகதி வழமைபோல் இயங்கும் எனவும் ஆளுநர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (9) விசேட விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.