– அனுராதபுரத்தில் நடைபெற்ற ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன். ஆற்றிய உரையின் தமிழ் மொழி பெயர்ப்பு.
நமது இதயங்களில் வாழும் ஜனாதிபதி அவர்களே, இந்த நாட்டிற்கு ஒரே ஒரு ஜனாதிபதியை மட்டுமே பெயரிட முடியும் என்றால், அன்றும் இன்றும் என்றும் இந்த நாட்டின் ஒரே ஜனாதிபதி என்றால் நமது மஹிந்த ராஜபக்ஷ, அவர்களிடம் அனுமதி வேண்டுகிறேன்.
எனக்கு இந்த மேடையில் நிறைய விஷயங்கள் பேச வேண்டியுள்ளது. முதலாவதாக, சிங்கள மக்களுக்கு ஒரு செய்தியைக் கூறுமாறு நமது மக்கள் என்னிடம் கூறினார்கள். “நாம் எதுவாக இருந்தாலும் இந்த நாட்டின் சிங்கள மக்களுடனே இருப்போம்” என்ற செய்தியை முதலாவதாக இந்த நாட்டிற்குக் கூறுமாறு கூறினார்கள். அதுதான் எனது முதல் செய்தி.
“சிங்கள மக்கள்” என்று கூறும்போது எனக்கு நினைவுக்கு வருவது மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மட்டுமே, வேறு யாருமில்லை!
ஒரு காட்டிற்குள் சிங்கமும் இருக்கலாம், புலியும் இருக்கலாம். ஆனால், நீங்கள் நரியை அல்லவா தேர்ந்தெடுத்து வைத்துள்ளீர்கள்! நரியை அல்லவா தேர்ந்தெடுத்து வைத்துள்ளீர்கள்!
ஒரு நாளாவது இந்த நாட்டின் 40 ஆண்டுகள் அனுபவம் அதற்கு இல்லை. அவர்கள் செய்த மிகப்பெரிய தவறைத்தான், நான் இந்த புலிகளிடமும் கூறுகிறேன், நீங்கள் நரியைப் பக்கத்தில் ஒதுக்கி வைத்துள்ளீர்கள். அதனால்தான் நான் இங்கு வந்து சிங்கங்களுடன் நின்று பேசுகிறேன்.
எனக்கு இன்றும் என்றும். நீங்களே பாருங்கள், எம்.பி.யாக இருந்தாலும் எனக்கு இன்று தனியாகவே செல்ல வேண்டியுள்ளது. ஆனால், ஐயா ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஐயா அமைச்சராக இருந்த காலத்தில், ஒரு எம்.பி. கூட காவல்துறை இல்லாமலோ பாதுகாப்பு இல்லாமலோ சென்றதில்லை. ஆனால் கோத்தபய ஜனாதிபதி அவர்களிடம் நான் ஒன்றைக்கூற விரும்புகிறேன்.
நாங்கள் புலம்பெயர் மக்களிடமிருந்து பெருந்தொகையான பணத்தை வாங்கித் தந்தோம், அது உங்களுக்குத் தெரியாது. நாங்கள் இந்த தேர்தலுக்காக பெருந்தொகையான பணத்தைக் கொடுத்தோம், அது உங்களுக்கு யாருக்கும் தெரியாது. ஆனால் அதே புலம்பெயர் மக்கள்தான் என்னிடம் கூறினார்கள், “போய் அவர்களிடம் சொல், இன்று சிங்கள மனிதர்களின் முன்னால் போய் சொல்” என்று. சரிதானே? மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நாம் ஏமாற்றப்பட்டோம், நாம் ஏமாற்றப்பட்டோம்!
நாங்கள் போரிட்டோம் ஐயாவுடன் சேர்த்து! இந்தப் பூமியில் எல்லாள மன்னன், ஐயாவின் துட்டகைமுணு மன்னனுடன் போரிட்டான். ஆனால் மனதில் வைத்துக்கொள்ளுங்கள், 2009க்கு பிறகு மீண்டும் துட்டகைமுணு வந்தால் எல்லாள மன்னன் சண்டையிட மாட்டான்.
அந்த எல்லாளனுக்குப் பதிலாகத்தான் நான் இங்கு வந்து நிற்கிறேன். நான் உங்களுக்கு ஒன்று கூறுகிறேன்.
வடக்கும் தெற்கும் மட்டுமே பேச முடியும், நரியால் பேச முடியாது. உங்களுக்குப் புரிகிறதா? எனக்கு சிங்களம் அவ்வளவுதான் தெரியும்.
வடக்கிலிருப்பவராலும் தெற்கிலிருப்பவராலும் மட்டுமே பேச முடியும், “இந்த நாட்டை உருவாக்குவோம்” என்று. ஆனால், அந்த காட்டிலிருக்கும் நரியைக் கொண்டுவந்து போட்டுவிட்டு, முகத்தைக் கூடப் பார்க்க முடியாமல், நரியைக் கொண்டுவந்து “கொத்தமல்லி குடி” என்று கூறியது.
நான் 10 வருடங்கள் டாக்டராக இருந்தேன். ஆனால் கண்டும் காணாமல் யாரிடமும் “கொத்தமல்லி குடி” என்று கூறியதில்லை. யாரிடமும் கூறியதில்லை!
நானும் இந்த கதையைப் பார்த்த பிறகு போய் தேடிப் பார்த்தேன். உண்மையிலேயே கொத்தமல்லி குடிக்க முடியுமா என்று தெரியவில்லை, நான் அதைக் கற்றுக்கொள்ளவில்லை. அதனால் கொத்தமல்லியைப் பற்றிக் கற்றுக்கொள்வோம் என்று கூகுளில் போய் தேடிப் பார்த்தேன், “கொத்தமல்லி கொடுங்கள்” என்று எங்குமே இல்லை!
ஜனாதிபதி அவர்களிடம் கூற நான் இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நினைவுகூர வேண்டும், நமது ரமேஷ் பத்திரண அமைச்சரைப் பற்றி. உங்களுக்குத் தெரியாது, என்னை அரசியலுக்குக் கொண்டு வந்ததே ரமேஷ் பத்திரண அமைச்சர்தான். என்னை அறிமுகப்படுத்தி வைத்தார், “போய் அழுங்கள்” என்று ஒரு அமைச்சுக்கு! சரிதானே?
அவர்… நான் டாக்டராக இருக்கும்போதே ரமேஷ் பத்திரண அமைச்சர்தான் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். அதனால் மனதில் வைத்துக்கொள்ளுங்கள், அதனால்தான் நான் மீண்டும் வந்து நிற்கிறேன்.
நான் ஒன்றைக்கூற விரும்புகிறேன், நீங்கள் நாமல் ராஜபக்ஷ அமைச்சரை பார்த்திருப்பீர்கள், பேசியிருக்க மாட்டீர்கள்.
முதலாவது தடவையாக நான் பாராளுமன்றத்திற்குச் செல்லும்போது… இப்போது நான் வருகிறேனே, “புலி, புலி” என்று சொல்லிக்கொண்டு. அப்போது எனக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார் நாமல் அமைச்சர்.
அப்போது அவர் கூறினார், “மச்சான், கொஞ்சம் வெளியே வா, நாம் பேசுவோம்” என்று. சென்று பேசினோம். நானும் பார்த்தேன் என்ன பேசப்போகிறார் என்று.
“உண்மையிலேயே மச்சான், நீ எங்களுக்கு எதிரியா?” என்று கேட்டார். அந்த கணமே நான் முடிவெடுத்தேன், எதிரி இல்லை என்று! அந்த கணமே நான் கூறினேன், “மச்சான், இப்படித்தான்… இப்போது இந்த கதையின் உண்மையைக் கூறுவதால் எனக்கு வடக்கில் வாக்குகள் இல்லாமல் போகலாம். எனக்கு இந்த அரசியல் தேவையில்லை, நான் 40 வருடங்களாக அரசியல் செய்யவில்லை, எனக்கு இந்த அரசியல் தேவையில்லை.”
நான் ஒன்றைக்கூறுகிறேன், நான் நாமலிடம் கூறினேன்: “மச்சான், நீ 2029-இல் ஜனாதிபதியாவது உறுதி! அதை நான் அறிவேன். சரிதானே?”
அந்தக் காலத்தில்… அந்தக் காலத்தில் உங்களுக்கு என்னை நினைவிருக்காமல் போகலாம். ஆனால் நான் ஒன்றைக்கூறுகிறேன், இங்குள்ள சிங்கள மக்களையும் வடக்கிலுள்ள தமிழ் மக்களையும் நீங்கள் ஒன்றுசேர்த்தால், அங்கு மச்சான் நான் இருப்பேன் உனக்கு கார் ஓட்டுவதற்கு!
தேவையென்றால், ஐயாவின் இந்தக் கதை இல்லை. இந்த ஐயாவின் கதையைக் கேட்க விடாமல் சிறையில் அடைத்தார்கள்.
நான் டாக்டராக இருந்தபோது என் மீது ஒரு வழக்குக்கூட இருந்ததில்லை. ஆனால் இந்த அரசியலுக்கு வந்த பிறகு, நமது கொத்தமல்லி ஜனாதிபதி அவர்கள் என் மீது 29 வழக்குகளைப் போட்டார்!
ஒரு நாளாவது நான் நீதிமன்றத்திற்குச் சென்றதே இல்லை. ஆனால் கொத்தமல்லி ஜனாதிபதி அவர்கள் துரத்தித் துரத்தி என் மீது வழக்குகளைப் போட்டார். அந்த 29 வழக்குகளில் இருந்து 10 வழக்குகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
எனது உதவி மருத்துவர் யோசிக்கிறார், “இதற்கும் வழக்கு போடுவார்களா?” என்று. இந்த அனுராதபுரத்திலும் என் மீது வழக்கு போட்டார்கள் ஒரு நாள்!
மனதில் வைத்துக்கொள்ளுங்கள், இந்த அனுராதபுர பூமி என்பது வரலாற்றில் நாம் என்றுமே மறக்க முடியாத, எல்லாள மன்னன் இங்கு வீழ்ந்தபோது, சிங்கள துட்டகைமுணு மன்னன் கூறினார், “அவர் வீழ்ந்த இடத்தில் நீங்கள் இதை உருவாக்குங்கள், ஒருவர் கூட அங்கு சத்தம் போட்டுச் செல்லக் கூடாது” என்று.
அவ்வளவு அன்பான சிங்கள மக்களுக்கு முன்னால்தான் நான் வந்து பேசுகிறேன் இங்கு. அவ்வளவு தன் எதிரிக்கும் மரியாதை செய்த மக்களுக்கு முன்னால்தான் நான் பேசுகிறேன்.
எனக்கு இன்று வேண்டுமென்றால் வடக்கிற்குச் சென்று “மீண்டும் தமிழ் ஈழம் வேண்டும்” என்று ஒரு உண்ணாவிரதம் இருக்கலாம், நான் ஒன்றைக்கூறுகிறேன், இந்த நாட்டில் நான் சாகும் வரை, “தமிழ் ஈழம் வேண்டும்” என்று கேட்க மாட்டேன். ஆனால் எனக்கு வேண்டும் இந்தச் சிங்கள மக்கள்! எனக்கு வேண்டும் இந்தச் சிங்கள மக்கள்!
நீங்கள் என்றாவது ஒரு தமிழ் மனிதனைத் திட்டும்போது எனது முகத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நான் ஒன்றைக்கூறுகிறேன், உங்களுக்குத் தமிழ் மனிதர்களைக் கொல்ல வேண்டும் என்றால் என்னைக் கொன்றுவிடுங்கள்!
ஆனால் நமது மக்களை நான் அழைத்து வந்து உங்களுடன் ஒன்றுசேர்த்துவிட்டுத்தான் நான் போவேன், அதை நான் முடிவெடுத்துவிட்டேன்.
நாமலிடம் கூறினேன், “மச்சான், என்ன ஆனாலும் 2029-இல் சிங்களம், தமிழ் எனும் பிரச்சினையை இல்லாதொழிப்போம்” என்று.
நமது மக்கள் இந்த பொய்யை நம்பினார்கள். நமது மக்கள் இந்த கொத்தமல்லி ஜனாதிபதி அவர்களை நம்பினார்கள். நம்பி பில்லியன் கணக்கில் பணத்தைக் கொடுத்தார்கள்.
இப்போது நாமல் அமைச்சர் வந்தவுடனேயே நமது சிலர் சென்று களிப்பில் இருக்கிறார்கள். “அட, நாமலே வந்துவிட்டார்” என்று,14-ஆம் திகதி அவர் வருகின்றார்.
ஆனால் நான் ஒன்றைக்கூறுகிறேன், “நாங்கள் கொடுத்த பணத்திற்கு இப்படி களிப்பில் மிதக்க வேண்டாம்” என்று அநுரகுமாரவிடம் கூறுங்கள்!
நாங்கள் இப்படி களிப்பில் மிதப்பதற்காகப் பணத்தைக் கொடுக்கவில்லை!
நமது புலம்பெயர் அமைப்பிலிருந்து பெருந்தொகையான…,உங்களுக்கு நினைவிருக்கும் அந்த 323 கன்டெய்னர்கள்.
அந்தக் காலத்தில் நான் பேசிய பேச்சுக்காக என்னை சிஐடி அழைத்து விசாரணை செய்தது. ஆனால் நான் சொன்னேன் பதில் சொல்ல முடியாது என்று, “தயவுசெய்து போய் படியுங்கள், நிலையியற் கட்டளைகளில் அல்லது சட்டத்தில் உள்ளதை… எனக்கு உள்ளே பேசிய பேச்சுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்” என்று.
ஆனால் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், 1988, 89 மீண்டும் 2029-இல் வரப்போகிறது! நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
அவர்கள் நீதிமன்றத்தைப் பிடிக்கிறார்கள், பாராளுமன்றத்தைப் பிடிக்கிறார்கள், பாராளுமன்ற சபாநாயகரின் அறைக்குச் செல்ல முடியாது நம்மால்!
நமக்குத் தெரியாது உள்ளே என்ன பார்க்கிறார்கள் என்று! சிலருக்கு இன்று பிஎச்.டி வழங்கப்படுகிறது, இல்லையென்றால் பிஎச்.டி இங்கிருந்து வழங்கப்படுகிறது! நம்மால் அங்கு சென்று பார்க்க முடியாது, சபாநாயகரின் அறைக்குள்!
நான் உங்களிடம் கூறுகிறேன், ஒவ்வொரு சிங்கள மக்களிடமும் கூறுகிறேன், நாம் தவறு செய்தோம். நானும் ஐயாவின் டீசர்ட்டைப் போட்டுக்கொண்டு சென்றேன் அந்தக் காலத்தில், இந்த ரமேஷ் அண்ணன் என்னை அறிமுகப்படுத்தியபோது, நானும் அவரின் டீசர்ட்டைப் போட்டுக்கொண்டு சென்றேன் வடக்கிற்கு! ஆனால் நான் வெட்கப்படுகிறேன், அந்த டீசர்ட்டைப் போட்டதற்காக இன்றளவும் நான் வெட்கப்படுகிறேன்!
நாங்கள் உங்களைப் போலத்தான், நாங்களும் இந்த அரசை நம்பினோம். ஆனால் இப்போது விழித்துக்கொள்ளுங்கள்! நீங்கள் இப்போது விழித்துக்கொள்ளாவிட்டால், உங்கள் வீட்டிற்கு வரும் வரை உங்களுக்குப் புரியாது இந்த கொத்தமல்லி ஜனாதிபதி!
நான் ஒன்றைக்கூறுகிறேன்… இப்போது ஒவ்வொருவராக வந்து சொல்கிறார்களே “திருடர்கள், திருடர்கள்” என்று, நான் 40 வருடங்களாக என்னடா திருடினேன்? நான் எங்கேடா அரசியல் செய்தேன்?
ஆனால் அவர்களின் எம்.பி. ஒருவர் ஆடு திருடியிருக்கின்றார்! வேறொன்றும் இல்லை, ஆடு திருடியிருக்கின்றார்! சரிதானே? மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
2022-இல் இளங்குமரன் மீது வழக்கு போட்டிருந்தார்கள், ஆடு திருடினார் என்று!
ஜனாதிபதி அவர்களே, இவர் ஏர்பஸ் திருடவில்லை. ஜனாதிபதி அவர்களே, பெரிய திருட்டு செய்தார்கள் என்று இவர்களால் நிரூபிக்க முடியாது! அவர்களின் அனுபவத்திற்கு முடிந்தது போன் ஒன்றைத் திருடுவதுதான்!
“போன் ஒன்றைத் திருடினார்” என்று வழக்கு இருக்கிறது! “போன் ஒன்றைத் திருடிக்கொண்டு சென்றார்” என்று இளங்குமரன் மீது வழக்கு இருக்கிறது!
அப்படிப்பட்ட மனிதர்களை நீங்கள் பாராளுமன்றத்திற்குக் கொண்டுவந்து போட்டு… ஒன்றைக்கூறவா? பாராளுமன்றத்திற்குச் சம்மந்தமே இல்லாத மனிதர்களைக் கொண்டுவந்து நீங்கள் போட்டுள்ளீர்கள்!
ஆனால் நான் இன்று கூறுகிறேன், நான் இதுவரை கூறியதெல்லாம் உண்மையானது. எனது நாக்கு கருப்பானது. அதனால் நான் சொன்னேன், அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாவார் என்று, அது உண்மையானது. தவறாக நடந்துவிட்டது அது.
அதன் பிறகு சொன்னேன் விஜய் முதலமைச்சர் ஆவார் என்று, அதுவும் நடந்தது.
நான் கூறுகிறேன், 2029-இல் உங்களுக்கு விருப்பமோ இல்லையோ, சிறையில் போட்டாலும் எதில் போட்டாலும், நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாவது உறுதி! வேணுமென்றால் பந்தயம் கட்டிப் பார்ப்போம்!