தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதித் தூதுவர் கணேசநாதன் கேதீஸ்வரன் தமிழ்நாட்டின் (மற்றும் புதுச்சேரியின்) உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவுத் தலைவர் பவன் கெரா (Pawan Khera) குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி, வைத்திக்குப்பம் பகுதியில் உள்ளூர் மீனவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறியும் நிகழ்வொன்றில் தூதர் கணேசநாதன் கேதீஸ்வரன் கலந்துகொண்டார்.
இந்தச் சந்திப்பை லட்சிய ஜனநாயக் கட்சியின் (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஏற்பாடு செய்திருந்தார். இதில் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) வி.பி.ராமலிங்கமும் கலந்துகொண்டார்.
வெளிநாட்டுத் தூதர்கள் அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற வியன்னா உடன்படிக்கையை (Vienna Convention) இந்தச் செயல் மீறுவதாக பவன் கெரா தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில், இத்தகைய சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இது குறித்துத் தூதரக ரீதியான எதிர்ப்பைப் பதிவு செய்வாரா?
தற்போது இந்தியாவில் பொதுத்தேர்தல் காலம் என்பதால், ஒரு வெளிநாட்டுத் தூதர் அரசியல் கட்சித் தலைவர்களுடன் இணைந்து மீனவர்களைச் சந்தித்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.