தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது தொடர் தாக்குதல்; வன்மையாகக் கண்டிக்கத் தக்கது

கடலில் வைத்து ஒரு கடற்றொழிலாளரை பிடித்துக் கொண்டு போய் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் குறித்த இலங்கை கடற்றொழிலாளரை கடற்கொள்ளையர் என சந்தேகத்தின் பேரில் பிடித்து அவரை அடித்து துன்பப்படுத்துகிற,காயப்படுத்துகிற விதமான புகைப்படங்கள், காணொளி சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளி வந்துள்ளது.

இந்தநிலையில் குறித்த மனிதாபிமானமற்ற செயற்பாட்டிற்கு சிவில் சமூகம் சார்பாக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் நண்டு வலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (28) காலை மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 25 கடற்றொழிலாளர்களுக்கு குறித்த நண்டு வலைகள் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த கடற்றொழிலாளர் கடற்கொள்ளையராக இருந்தால் அவரை பிடித்து சட்ட நடவடிக்கைக்கு உற்படுத்தி இருக்க முடியும். இரண்டு நாடுகளுக்குமான ராஜதந்திர முறை இருக்கிறது. அவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் ஒப்படைக்கப்பட வேண்டும். அது முறையாக விசாரணை செய்யப்பட்டு, இரண்டு நாடுகளும் ராஜதந்திர ரீதியாக கையாளப்பட வேண்டும்.

அதை விடுத்து சக கடற்றொழிலாளர்களுக்கு இடையே நீங்கள் தண்டனை கொடுக்க அல்லது பிடித்து அவர்களை இரண்டு பேருக்கும் மாறி மாறி இலங்கையில் இருக்கின்ற கடற்றொழிலாளர்களும் தமிழ்நாட்டில் இருக்கிற கடற்றொழிலாளர்களுக்கும் இடையே நீங்கள் அந்த முரண்பாடுகளை உருவாக்கி விட்டீர்கள் என்றால் இது ஒரு பெரிய ஆபத்தான நிலையை உருவாக்கும். தடை செய்யப்பட்ட காலத்தில் இந்தியா கடற்றொழிலாளர்கள் இழுவைப் படகுகள் தற்போது தடை செய்யப்பட்டிருக்கிறது.

குற்றம் செய்தவர்களை நீதிமன்றம் தான் கண்டிக்கலாம். அதற்கான தீர்ப்பு வழங்கலாம். இரண்டு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திரங்கள் கவனமாகவும், கௌரவமாகவும் மதிக்கப்பட வேண்டும். ஆனால் நாங்கள் பார்க்கும்போது ஒரு கடற்றொழிலாளர் அவர் என்ன குற்றம் செய்திருக்கலாம்? ஆனால் அதை நீதிமன்றங்கள் தான் கையாள வேண்டும். அதற்கான விசாரணை செய்து முறையான தண்டனைகள் அவர் குற்றம் செய்திருந்தால் அவருக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் வாழ்வாதாரத்திற்காக கடற்றொழிலை பிரதான தொழிலாக கொண்டுள்ள கடற்றொழிலாளர்கள், அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் காரணமாக தமது மீன்பிடி வலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்களை இழந்து பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.

3

“ரஜினிகாந்த் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது!” – அண்ணாமலை, லாரன்ஸ் விவகாரத்தில் ரஜினி நற்பணி மன்றம் அசுர வேக அறிக்கை!

June 14, 2026

சென்னை: “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரையோ அல்லது அவரது புகைப்படத்தையோ எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ தங்களது சுயலாபத்திற்காகப்

2

“திமுக-வை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை; டாஸ்மாக் ரெய்டுக்காக டெல்லி சென்றவர் ஸ்டாலின்!” – திமுக தலைவருக்குத் தவெக ஐடி விங் அசுர வேக மாஸ் பதிலடி!

June 14, 2026

சென்னை: “வாய்ப்பு கிடைக்கும் துறைகளில் எல்லாம் மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக

1

“சாதி, மத, பணபல அரசியலைக் கடந்து மக்கள் மௌனப் புரட்சி செய்துள்ளனர்!” – திமுக கூட்டணி குறித்து துரை வைகோ அசுர வேக அதிரடிப் பேட்டி!

June 14, 2026

மதுரை: “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சாதி, மத, பணபல அரசியலை அடியோடு தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் மாபெரும் மௌனப்

722205425_2516904032157267_6855962867046714642_n

மயிலிட்டி மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற நாளைய போராட்டத்திற்கு பூரண ஆதரவு, அனைவரையும் கலந்து கொள்ளுமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை

June 14, 2026

போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில் மயிலிட்டி மக்கள்

pta

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) நீக்கப்படுகிறது; இரண்டு மாதங்களில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது

June 14, 2026

கொழும்பு: இலங்கையில் நீண்டகாலமாகப் பலத்த விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) முழுமையாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக

QLLE5GRSC5F5FCSDC7A63GB54U

பிரிட்டிஷ் கொலம்பியா இளைஞரைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்: தொடர் அச்சுறுத்தல் குற்றச்சாட்டு

June 14, 2026

ரொறன்ரோ: நபர் ஒருவருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் மற்றும் தொல்லை கொடுத்து வந்த குற்றச்சாட்டின் பேரில், பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தைச்

VFSVNY33WNCS5IL6IWULQ3EVUQ

ரொறன்ரோவில் கத்திக்குத்துச் சம்பவம்: 50 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயம்

June 14, 2026

ரொறன்ரோ: கனடாவின் ரொறன்ரோ நகரின் கிழக்குப்பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 13, 2026) இரவு நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 50 வயது

JZTK3F6L2NCDDLTE6OY6XIQ4OI

கனடாவில் கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் பலி

June 14, 2026

ஒண்டாரியோ: கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தில் நிகழ்ந்த மிக மோசமான வாகன விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள்

sss

சியான்’ விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

June 14, 2026

தமிழ் திரையலகின் பெருமிதமாக ஜொலிக்கும் சர்வதேச தரத்திலான நட்சத்திர நடிகர் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்

ang

நவீன தொழில் நுட்பத்தில் தயாரான பாடலை வெளியிட்ட ‘அங்கீகாரம்’ படக் குழு

June 14, 2026

அறிமுக நாயகன் கே ஜே ஆர் நடிப்பில் தயாராகி உள்ள ‘அங்கீகாரம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெற்றி விழா ஆந்தம்’எனும்

sam

நடிகை சமந்தா நடிக்கும் ‘எங்கள் தங்கம்’

June 14, 2026

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழும் சமந்தா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

100

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம்

June 14, 2026

மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இயக்குநர் சசி