தமிழ்கட்சிகள் தங்களது கடமைகளை தவறிவிட்டன; ஆனால் அந்த இடைவெளியை தமிழர் விடுதலைக்கூட்டணி நிரப்பும்

சுயநலம் குடிகொண்டுள்ள தமிழ்கட்சிகள் தங்களது கடமைகளை தவறிவிட்டன. எனவே அந்த இடைவெளியை தமிழர் விடுதலைக்கூட்டணி நிரப்பும் என்று அதன் ஊடக பேச்சாளரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சுதாகரன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று(14.3.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழர் விடுதலைக்கூட்டணியானது புதிய நிர்வாகிகளின் கீழ் தமிழ்மக்களுக்கான தலைமையை வழங்கும் நோக்குடன் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.

நாங்கள் கடந்த காலங்களில் சில பின்னடைவுகளை சந்தித்திருந்தோம். தற்போது இளைஞர்களின் பங்களிப்புடன் புதிய உத்வேகத்துடனும் முன்னிலையான செயற்பாட்டை நோக்கி நகர்ந்து வருகின்றோம்.

தற்போது தமிழ் மக்கள் தலைமைத்துவம் அற்று மோசமான நிலையில் வாழ்கின்றனர். எந்த ஒரு தமிழ்கட்சிகளும் மக்களின் விடுதலைக்கான சரியான பாதையினை தெரிவு செய்யவில்லை.

தொடர்ச்சியாக பிழையான பாதையில் அந்த கட்சிகள் பயணிக்கின்றன. கட்சிகளில் சுயநலம் குடிகொண்டுள்ளது. பொது நலம் இல்லாமல் போய்விட்டது.

தமிழ்கட்சிகளுக்கு போதுமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டு விட்டது. 2009 போர் முடிவடைந்த பின்னரும் கூட நீண்ட காலமாக வாய்ப்பு வழங்கப்பட்டது.

அவர்கள் தங்களது கடமைகளை சரியாக நிறைவேற்றவில்லை. நிச்சயமாக தமிழர் விடுதலை கூட்டணி அதற்கான இடைவெளியை நிரப்பும் என்று ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றேன்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் செயற்பாடு எப்போது தளரத்த தொடங்கியதோ அன்று தமிழ் மக்களின் வாழ்க்கையும் தளர்ந்து விட்டது. நேரடியாக தந்தை செல்வாவுடனும் ஜிஜி பொன்னம்பலத்துடனும் இருந்த ஒரே தலைவர் ஆனந்தசங்கரியே அவரே இந்த கட்சியை கட்டமைத்து வருகின்றார்.

பழையவர்களை நாங்கள் மறக்ககூடாது. பழையவர்களின் கடந்த கால அனுபவங்களும் எங்களது புத்திசாலித்தனமுமே இந்த தேசத்திற்கு விடுதலையை பெற்றுத்தரும்.

எனவே எங்களை தமிழ் மக்கள் நம்புங்கள். இளைஞர்கள் எங்களுடன் இணையுங்கள். என நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் தமிழர்விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, கட்சியின் வன்னிமாவட்ட கிளையின் தலைவர் உதயன், செயலாளர் திவா,இளைஞரணி செயலாளர் பத்மகாந்தன் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை கூட்டணியின் மத்திய குழுக்கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 10 மணிக்கு வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

teldeniya-hospital

தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரில் பெண் சடலமாக மீட்பு: பொலிஸார் மேலதிக விபரங்களை வெளியிட்டனர்

June 18, 2026

தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனமொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை குறித்து, கடந்த புதன்கிழமை மாலை கிடைக்கப்பெற்ற

United-National-Party-UNP-6

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணை: அமெரிக்க FBI ஆவணங்களை அரசாங்கம் கோரியதா? ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி

June 18, 2026

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா நடத்திய புலனாய்வு விசாரணைகளின் ஆவணங்களை, இலங்கை அரசாங்கம்

sugee

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

June 18, 2026

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளராகப் (Private Secretary) பணியாற்றிய சுகீஸ்வர பண்டார, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால்

chemmani 16

செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தமிழன அழிப்பின் நினைவகமாக பேணும் முன்மொழிவு

June 18, 2026

செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தமிழன அழிப்பின் நினைவகமாக பேணும் முன்மொழிவு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் அவர்களினால்

726262003_10164709009478330_8368079180489554372_n

யாழ். இந்துக்கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்றுவரும் நிலம் 2026 கண்காட்சி

June 18, 2026

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆக்க இலக்கியக் கழகம் மற்றும் மரபுரிமைக் கழகம் இணைந்து வழங்கும் நிலம் 2026 கண்காட்சி 17.06.2026

725318368_2058758262187576_6402210801055450387_n

நாகப்பட்டினம் நோக்கிப் புறப்படவிருந்த பயணிகள் கப்பலில், தங்கக் கட்டிகளை விழுங்கி வினோதமான முறையில் கடத்த முயன்ற 6 பேர் உட்பட இருவர் கைது

June 18, 2026

யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் நாகப்பட்டினம் நோக்கிப் புறப்படவிருந்த பயணிகள் கப்பலில், தங்கக் கட்டிகளை விழுங்கி வினோதமான முறையில்

suresh11

தடுப்புக்காவல் அறை “நரகத்தைப் போல” உள்ளது எனக் கூறும் சுரேஷ் சலே; உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர முடிவு

June 18, 2026

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வுச்

naina

குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை: வேலணை பிரதேச சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றம்தேசிய மக்கள் சக்தியினரின் எதிர்ப்பால் சபையில் குழப்பம்

June 18, 2026

புங்குடுதீவு – குறிகாட்டுவான் இறங்குதுறை சுற்றுவட்டத்தில், தீவகத்தின் பிரதான அடையாளங்களுள் ஒன்றான நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனின் சிலையை வைப்பதற்கு

Attorney-at-Law Manoj Gamage-843723

யோஷித ஏன் கடற்படையில் இணைந்தார்? மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் விளக்கம்

June 18, 2026

யோஷித ராஜபக்ஷ தொடர்பான தற்போதைய சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள பின்னணியில், அவர் ஸ்ரீலங்கா கடற்படையில் இணைந்தது குறித்தும், அதுசார்ந்த மாறுபட்ட

725803822_974055808790145_1800696509075835249_n

டர்ஹாம் பிராந்திய பொலிஸ் சேவை வாரியம் இரண்டு புதிய பிரதிப் பொலிஸ் அதிபர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவிப்பு

June 18, 2026

டர்ஹாம் பிராந்திய பொலிஸ் சேவை வாரியம் இரண்டு புதிய பிரதிப் பொலிஸ் அதிபர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவிப்பு டர்ஹாம் பிராந்திய பொலிஸ்

Legends

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 18, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

A member of the French aid group Action Contre La Faim places a wreath in front of the photographs of his 17 slain colleagues at their memorial in Batticaloa, Sri Lanka, August 11, 2006. REUTERS/Buddhika Weerasinghe (SRI LANKA)

மூதூரில் 2006ம் ஆண்டு 17 மனிதாபிமான பணியாளர்கள் படுகொலை – இலங்கை அரசாங்கம் புதிய விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என ஏசிஎவ் வேண்டுகோள்

June 18, 2026

மூதூரில் மனிதாபிமான பணியாளர்கள் 17 பேர் 2006 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் புதிய விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும்