தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது – அண்ணாமலை

“தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை நினைவில் வைத்துக்கொண்டு வாக்களியுங்கள்,” என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பரமசிவத்தை ஆதரித்து இன்று வெள்ளிக்கிழமை (ஏப்.17) காலை பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: அமலாக்கத் துறையை முதன்முதலாக வேடசந்தூருக்கு அழைத்துவந்து இரண்டு நாட்கள் ரெய்டு நடத்திய பெருமை திமுக வேட்பாளருக்கு சேரும். பொங்கல் தொகுப்பில் ஒழுகும் வெள்ளம் கொடுத்தவர்கள் திமுகவினர். என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், வேடசந்தூர், வடமதுரை பகுதிகளுக்கு காவிரி நீரை கொண்டுவந்து குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

வேடசந்தூர் தொகுதியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த நீங்கள் பரமசிவத்தை ஆதரிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் சரித்திரமிக்க மசோதாவை கொண்டுவந்துள்ளனர். 33 சதவீத மகளிருக்கு இடஒதுக்கீடு மசோதா மகளிருக்கு உதவி செய்யும்.

முதல்வர் ஸ்டாலின் பொய்பேசி வருகிறார். தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் மக்களவை தொகுதி இடங்கள் 39 ல் இருந்து 59 என உயர்த்தியுள்ளனர். எல்லா மாநிலங்களுக்கும் 50 சதவீத உயர்வு இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மகளிரை நாடாளுமன்றத்துக்கு அழைத்துச் செல்ல மகளிர் இட ஒதுக்கீட்டை பிரதமர் கொண்டு வந்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் – ஒழுங்கு கெட்டுவிட்டது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. சட்டம் – ஒழுங்கை நினைவில் வைத்து வாக்களியுங்கள்.

குடகனாற்றில் வரும் நீரை ஒரு மந்திரி திருப்பி கொண்டு போய்விட்டார். ஆற்றுக்கு தண்ணீர் வரும் வழியில் தடுப்புசுவர் கட்டி தண்ணீரை திருப்பிவிட்டனர். குடும்ப ஆட்சி இல்லாத மாவட்டமாக திண்டுக்கல்லை நீங்கள் மாற்ற வேண்டும்.

முதல்வர் ஒரு பொம்மை, கீ கொடுத்தால் காலையில் டெல்லி, மதியம் இந்தி, மாலையில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்பார்.

வேடசந்தூர் தொகுதிக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவற்றவில்லை. பெரிய மாற்றத்தை ஏற்படுத்த அதிமுகவை ஆதரிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றியுள்ளது. அதேபோல் நீங்கள் முதல்வரை மாற்றிவிடுங்கள்.

திமுக வேட்பாளர் சாமிநாதன் எப்பொழுது வேண்டுமானாலும் கைது செய்யப்படுவார் என்பதை மறந்துவிடாதீர்கள். இப்படித்தான் கரூர் சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்தார். அதனால் அதிமுக வேட்பாளரை ஆதரியுங்கள்”. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

பிரச்சாரத்தின்போது, திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன், பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

qr

நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை

April 17, 2026

நாளை (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

jail

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

April 17, 2026

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு

tv

த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

April 17, 2026

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன

wat

நான்கு நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கிப் பலி!

April 17, 2026

கடந்த ஏப்ரல் 12 முதல் நேற்று (16) வரையிலான நான்கு நாட்களில் மட்டும், நீரில் மூழ்கி 20 பேர் துரதிர்ஷ்டவசமாக

jey

நிலக்கரி கொள்வனவு ஊழல் அழுத்தங்கள்; எரிசக்தி அமைச்சர் இராஜினாமா!

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தனது பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ

sr air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் பிரதான அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின்

chac

லங்கா நிலக்கரி நிறுவனத்தின் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதியால் விசேட ஆணைக்குழு

April 17, 2026

அரசுக்குச் சொந்தமான லங்கா நிலக்கரி நிறுவனம் (Pvt) Ltd அல்லது அதன் பின்வந்த நிறுவனங்களில், நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார

up

15 வயது மாணவி சடலமாக மீட்பு

April 17, 2026

செ.தி. பெருமாள் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் குதித்து, 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இன்று மதியம்

im

சீர்திருத்த வேகத்தைத் தக்கவைக்க இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தல்

April 17, 2026

உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் தளம்பல் நிலைகளால் இலங்கை மீண்டும் அபாயங்களை எதிர்கொண்டுள்ளதால், தனது சீர்திருத்த வேலைத்திட்டங்களில் உறுதியாக இருக்குமாறு

ssdfes

அம்பேத்கரின் சிந்தனைகளை யாராலும் தகர்க்க முடியாது – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

April 17, 2026

சாதி ஒழிப்புக்கு கல்வியை தவிர வேறு ஆயுதம் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். மதுரை

kush

நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது – குஷ்பு

April 17, 2026

“இந்​தத் தேர்​தலில் திமுக-வுக்கு மிகப்​பெரிய ஏமாற்​றம் காத்​திருக்​கிறது. இது முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் திமுக-​வில் உள்ள அனை​வ​ருக்​கும் நன்​றாக தெரி​யும்”

ann

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது – அண்ணாமலை

April 17, 2026

“தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை நினைவில் வைத்துக்கொண்டு வாக்களியுங்கள்,”