“தனுஷ் விஜய்க்கு போட்டியா?” – அமைச்சர் மரிய வில்சன் பதில்!

சென்னை:

நடிகர் தனுஷ் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி அரசியலுக்கு வந்தால், தமிழ்நாடு அரசியலில் அவர் தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கு ஒருபோதும் போட்டியாக அமைய மாட்டார் என அமைச்சர் மரிய வில்சன் அதிரடியாகக் கூறியுள்ளார். இது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் அரசியல் பிரவேசம்:

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மரிய வில்சனிடம், தனுஷ் அரசியலுக்கு வரவுள்ளதாகப் பேசப்படுவது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “”வரட்டும், மிகவும் நல்லதுதான். இது ஒரு ஜனநாயக நாடு, இங்கு யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். யார் வேண்டுமானாலும் தேர்தலில் தாராளமாகப் போட்டியிடலாம்,”” என்றார். தொடர்ந்து, உங்க தலைவருக்கு அவர் போட்டியாக இருப்பாரா எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குச் சட்டென முகம் மாறிய அமைச்சர், அதற்கெல்லாம் எந்தவிதமான வாய்ப்பே கிடையாது என்றும், அந்த கேள்வியை நீங்கள் உடனடியாகத் திரும்பிப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் ஆவேசமாகக் கூறினார்.

திராவிடக் கட்சிகளின் கணக்கு:

முதலமைச்சர் என்பவர் அவர் மட்டும்தான். 50 ஆண்டுகள் ஆட்சி செய்த இரண்டு பெரும் கட்சிகளைத் தவிர்த்து மக்கள் எங்களுக்கு மாபெரும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். போட்டி என்றால், திமுக மற்றும் அதிமுக இடையேவே தற்போது போட்டி கிடையாது. அப்படி இருக்க, இப்போது புதிதாக வருபவரை எப்படி எங்களுக்குப் போட்டியாகப் பார்க்க முடியும் என்று அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். தனுஷை எனக்கு நன்றாகத் தெரியும், என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் ஒரு முடிவு எடுத்து இருக்கிறார். அது சரியா இல்லை தவறா என்று வரப்போகும் நாட்களில்தான் தெரியும் எனக் கூறினார். விஜய் என்ற பிம்பத்தை உடைக்கத் திராவிடக் கட்சிகள் தனுஷைக் கையில் எடுத்திருப்பதாகக் கூறப்படுவது குறித்துப் பதிலளித்த அவர், கடந்த தேர்தலில் இரண்டு கட்சிகளும் பெரிய கூட்டணியுடன் கணக்குப் போட்டார்கள், அதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துவிட்டார்கள் என்றார்.

ரஜினி பிரச்சாரம்:

அதேபோன்று மற்றொரு நட்சத்திரம் வருகிறார் என்று அவர்கள் கணக்குப் போடட்டும், அது அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே அமையும் எனத் தெரிவித்தார். ரஜினிகாந்த் அவருக்குப் பிரச்சாரம் செய்தால் மக்கள் மாறிடுவார்கள் என்ற கேள்விக்கு, “”கடந்த காலங்களில் இதுபோன்ற பல நிகழ்வுகளை நிறைய பார்த்துவிட்டோம். மக்கள் ஏற்கனவே தங்களது முடிவு என்னவென்று சொல்லிவிட்டார்கள். இனி யார் பிரச்சாரம் செய்தால் என்ன? அதற்கெல்லாம் இன்னும் நிறைய நேரம் இருக்கிறது,”” என அவர் பதிலளித்தார். சமீபத்தில் நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றங்களைத் ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ என்று மாற்றியுள்ளது அரசியல் வருகைக்கான அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது. கொடி தொடர்பான சர்ச்சைகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இது திரைத்துறையிலும் தமிழக அரசியலிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் சம உரிமை உண்டு என்பதை அமைச்சர் தனது பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

#Dhanush #CMVijay #MariaWilson #TVK #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive

IMG_0717

பலத்த சூறாவளி… மக்களுக்கு எச்சரிக்கை!

October 25, 2026

எதிர்வரும் 27 ஆம் திகதி காலையளவில் வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய கடற்பகுதியில் பலத்த சூறாவளி நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக

8

“என்னை களங்கப்படுத்துகிற முயற்சி வெற்றி பெறாது!” – நாஞ்சில் சம்பத் பரபரப்பு பதிவு!

October 25, 2026

சென்னை: கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மூத்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்குக் கட்சியில் கொள்கைப்

7

“தவெக அரசு வானூர்தி எரிபொருளுக்கு வரிச்சலுகை அளிப்பது ஏன்?” – சீமான் சரமாரி கேள்வி!

October 25, 2026

சென்னை: அரிசி வாங்கவே மக்கள் அல்லல்படும்போது தவெக அரசு வானூர்தி எரிபொருளுக்கு வரிச்சலுகை அளிப்பது ஏன் என்றும் இந்த ஆட்சியும்

6

“தேசிய அளவில் மின் தேவை அதிகரிப்பை மத்திய அரசு முன்கூட்டியே கணிக்காதது ஏன்?” – அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி!

October 25, 2026

ராமநாதபுரம்: தேசிய அளவில் மின் தேவை அதிகரிப்பு குறித்து மத்திய அரசு முன்கூட்டியே கணிக்காதது ஏன் என்று தமிழக மின்சாரத்

UDHAYANIDHI STALIN - 1

“அரிசியை பாலிஷ் போட்டு விற்பதுதான் மாற்றமா?” – உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி!

October 25, 2026

சென்னை: மக்களுக்கான கட்டணமில்லா ரேஷன் அரிசியைப் பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்றுக் கொள்ளையடிப்பதுதான் மாற்றமா என்று எதிர்க்கட்சித் தலைவர்

4

“தமிழக அரசியலுக்கு எந்த நடிகர்கள் வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை!” – ஆதவ் அர்ஜுனா!

October 25, 2026

சென்னை: தமிழக அரசியலுக்குப் புதியதாக எந்த நடிகர்கள் வந்தாலும் அது குறித்து எங்களுக்குச் சிறிதும் கவலை இல்லை என்று தவெக

3

“தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு திமுகதான் பொறுப்பு!” – வைகோ நேரடி அட்டாக்!

October 25, 2026

மதுரை: எஸ்ஐஆர் மூலமாகத் தமிழகத்தில் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு திமுகதான் முழு பொறுப்பு என்று மதிமுக பொதுச்செயலாளர்

2

“தவெக ஆட்சியை அகற்ற தயாராகுங்கள்!” – திமுக தலைவர் ஸ்டாலின் பரபரப்புப் பேச்சு!

October 25, 2026

சென்னை: தவெகவுக்கு வாக்களிக்காதவர்கள் மட்டுமல்லாமல், வாக்களித்தவர்களும் புலம்பக்கூடிய நிலைதான் இந்த ஆட்சியில் உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக்

1

“செஃப் தாமு மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்!” – குக் வித் கோமாளி குழுவினர் அஞ்சலி!

October 25, 2026

சென்னை: பிரபல சமையல் கலை நிபுணரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான செஃப் தாமு என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் கே.தாமோதரன்

OpenAI

மனித உருவ ரோபோ உருவாக்கும் Open AI!

October 25, 2026

செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதில் OpenAI ஒரு முன்னணி நிறுவனம் ஆகும். தற்போது, ​​அந்நிறுவனம் மனித உருவ ரோபோக்கள் துறையிலும்

images (1)

எடைக்குறைப்புக்கு எது சிறந்தது?

October 25, 2026

எடை குறைக்கவும், சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் பலரும் பிளாக் காபி மற்றும் கிரீன் டீயை தங்களது தினசரி உணவுப்

s

ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளுக்கான தேவைகள்!

October 25, 2026

5 வயது பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள்