இணுவில் சந்தியில் வீதி விபத்து – 67 வயதுடைய முதியவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி, இணுவில் சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 67 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் இணுவில் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவரே உயிரிழந்தவராவார். இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.    

யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து 18 பவுன் நகை கொள்ளை!

யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில், இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து களவாடப்பட்ட நகைகளில் ஒரு தொகை நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. உதயபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் வீட்டில் இல்லாத நேரம் வீட்டினை உடைத்து 18 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் உதயபுரம் பகுதியை சேர்ந்த இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் அடிப்படையில் இளைஞனிடம் இருந்து […]

வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மழை அதிகரிக்கக்கூடும் எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவின் வட அந்தமான் தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளைய (25) தினத்துக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 26ஆம் திகதி காலைக்குள் மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் தீவிர சூறாவளியாகவும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் அமைப்பு இலங்கையை நேரடியாகத் தாக்காது என எதிர்பார்க்கப்பட்டாலும், […]