கட்டார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு வருவதால், நகரின் மத்திய பகுதியில் இடைவிடாத வெடிப்புச் சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டோஹா நகரின் மத்தியப் பகுதிக்கு மிக அண்மித்த வான்பரப்பில் தொடர்ச்சியான பலத்த வெடிப்புச் சத்தங்கள் பதிவாகி வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டார் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் இஸ்ரேல் அல்லது ஏனைய தரப்புகளிடம் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளைத் தொடர்ந்து இடைமறித்து அழித்து வருவதாக கட்டார் பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக கட்டார் பாதுகாப்பு அமைச்சகம் ஏவுகணைகளை இடைமறிப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தாக்குதல்களின் வீரியம் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வளைகுடா பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், டோஹா நகரில் நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்கள் கடும் அச்சத்தில் உள்ளதாகவும் அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.