கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள ‘செயின்ட் ஜேம்ஸ் டவுன்’ (St. James Town) பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை அதிகாலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
‘வெல்லஸ்லி ஸ்ட்ரீட் ஈஸ்ட்’ (Wellesley St. East) மற்றும் ‘செயின்ட் ஜேம்ஸ் அவென்யூ’ (St. James Ave) பகுதிக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
குறித்த கட்டிடத்தின் நடைபாதையில் (Hallway) கத்திக் குத்துக்காயங்களுடன் நபர் ஒருவர் கிடப்பதைக் கண்ட பொலிஸார், அவரை மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து டொராண்டோ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.