‘டிலைட்’ படுகொலையின் பின்னணி

மாத்தறை – தேவேந்திர முனையில் இன்று (21) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது, குறித்த நபருக்கு இருந்த உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியிலேயே இடம்பெற்றுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

இன்று பிற்பகல் 1 மணியளவில் மோட்டார் கார் ஒன்றில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதுடன், இந்தத் தாக்குதலில் 55 வயதான சிரில் ஹேந்தவித்தாரண என்ற “டிலைட்” என அழைக்கப்படும் மீன் வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூடு 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவருக்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றின் மீதும் 2023 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், அதில் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. இவ்வாறான சூழ்நிலையில், அவர் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையில் செய்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸ் ரோந்துப் புத்தகம் ஒன்றும் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த நபரைப் பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியிருந்த போதிலும், அவர் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல் அப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். இன்றைய தினமும் அவர் கந்தரவிலிருந்து தெவிநுவரவிற்குச் சென்று கொண்டிருந்த போதே இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளார்.

அவர் மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொல்லப்பட்ட நபரின் சகோதரரும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரைக் கொலை செய்வதற்காகத் துப்பாக்கிதாரிகள் மோட்டார் கார் ஒன்றிலேயே வந்துள்ளதுடன், அவரைக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். இதற்கமைய, சந்தேகநபர்களைக் கைது செய்வதப்பதற்காக 6 பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில், கொலையாளிகள் வந்ததாகக் கூறப்படும் மோட்டார் கார் மாத்தறை, அமலகொட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று கொல்லப்பட்ட சிரில் ஹேந்தவித்தாரண எனப்படும் “டிலைட்” என்பவரால் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் எல்லகந்த ஆரண்ய சேனாசனம் அமைந்துள்ள காட்டுப்பகுதியில், பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘தெவிநுவர தமிழ்’ என்பவரின் நெருங்கிய சகாவான ‘ஜுங்கய்யா லால்’ என்பவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

அந்தக் கொலையைத் தொடர்ந்து, ‘தெவிநுவர தமிழ்’ என்பவர் ‘டிலைட்’ தரப்பினரை இலக்கு வைத்து அவர்கள் பயணித்த வேன் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர். எவ்வாறாயினும், அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களுக்குக் குறித்த குற்றச்சாட்டுகளுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும், மேன்முறையீட்டின் ஊடாக அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறான பின்னணியில், ‘டிலைட்’ என்பவர் ‘தெஹிகெதர பாலே’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினருடனும் நெருங்கிய தொடர்பைப் பேணியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆனால், பிற்காலத்தில் ‘தெஹிகெதர பாலே மல்லி’ என்பவரால் மேற்கொள்ளப்படும் ஹெரோயின் வர்த்தகத்தின் ஒரு பகுதியை ‘டிலைட்’ திருடியுள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த நபர் ‘தெஹிகெதர பாலே மல்லி’யின் எதிர்த் தரப்பான ‘உனக்குருவே சாந்த’ என்பவருடனும் தொடர்பைப் பேணியுள்ளதுடன், அதற்கமைய இரண்டு தரப்பினரதும் தகவல்களை இரு தரப்பிற்கும் வழங்கியமையினாலேயே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் தற்போது சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, கந்தர பிரதேசத்தில் உயிரிழந்த இந்த நபருக்கு மேலதிகமாக மேலும் 16 பேருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பொலிஸார் தமது பாதுகாப்பை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

pa

ராமநாதபுரத்தில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!

April 18, 2026

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய்

ath

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரானார் கௌதம் அதானி!

April 18, 2026

அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி, ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின்

arrest

தனது வீட்டு நாய்களுக்கு பட்டாசு சத்தம் பாதிப்பு எனத் தெரிவித்த பெண்ணைத் தாக்கியவர் கைது

April 18, 2026

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு சத்தம் தனது வீட்டு நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை நிறுத்துமாறு கோரிய அண்டை வீட்டுப் பெண்

murder

சித்தாண்டியில் மதுபானம் வாங்கப் பணம் தராத தாயைக் கொன்ற மகன் கைது!

April 18, 2026

கனகராஜா சரவணன் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபாய் பணம் தராத தாயை, அவரது 19 வயது மகன் தள்ளி வீழ்த்தியதில்

sagara-kariyawasam

முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசாங்கம் சட்ட அமுலாக்க நிறுவனங்களில் தலையிடுகிறது!

April 18, 2026

நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மீது நேரடி மற்றும் கடுமையான

ca

மீண்டும் கொல்கத்தாவுக்கு தோல்வி

April 18, 2026

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.

sri

தியாகத் தாய் அன்னை பூபதி போன்று நாம் கொள்கை உறுதியோடு பயணிக்க வேண்டும் – சிறீதரன் எம்.பி

April 18, 2026

எமது விடுதலைப் போராட்ட வரலாறு என்பது வெறும் பதிவுகள் அல்ல; அது எமது அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய

su

தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர் பேச்சுவார்த்தை

April 18, 2026

முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

sta

தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழக மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்தது பாஜக – மு.க. ஸ்டாலின்

April 18, 2026

“தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாட்டு மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்த பாஜகவுக்கும், அவர்களுடைய ஏவல் அடிமைகளான அதிமுக-வுக்கும்

pi

பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்க மாட்டார்கள்

April 18, 2026

“தமிழக கலாசாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,”

po

முன்னாள் எம்.பி சம்பத் அத்துகோரள மீது தாக்குதல்

April 18, 2026

காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள, பிடிகல – பம்பரவான

abu

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் தீவிர விசாரணை

April 18, 2026

இலங்கையின் பல பகுதிகளில் பெண்கள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாகப்