செம்மணியில் மீட்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளின்ஆய்வறிக்கை செப்.30 முன் நீதிமன்றுக்கு…

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட சான்றுப் பொருட்களை ஆராய்ந்து அதன் கால அளவினை தீர்மானித்து அது பற்றிய முழுமையான அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் 9 நாட்களும், இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 54 நாட்களும், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 56 நாட்களுமாக மொத்தம் 110 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த 110 நாள் அகழ்வுப் பணிகளின் நிறைவில், இதுவரை மொத்தம் 583 மனித எலும்புக்கூடுகள் வெளிப்பட்ட நிலையில், அவை அனைத்தும் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி அகழ்வுப் பணிகளின் போது பெரியவர்கள் மட்டுமன்றி சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தைகளின் என்புக்கூடுகளும் வெளிப்பட்டுள்ளன.

மேலும், சில என்புக்கூடுகள் ஒன்றின் மீது ஒன்று பின்னிக் காணப்பட்ட நிலையிலும், என்புக்கூட்டுக் குவியல்களாகவும், ஒழுங்கற்ற முறையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த என்புக்கூடு ஒன்றும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டது.

இது போன்ற நிலையில் காணப்பட்ட என்புக்கூடு, செம்மணி அகழ்வில் இரண்டாவது முறையாகவும் வெளிப்பட்டது.

அகழ்வுப் பணிகளின்போது மனித என்புக்கூடுகளுடன் பல்வேறு பொருட்களும் சான்றுகளாக மீட்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான பால் போத்தல்கள், பாடசாலைப் புத்தகப் பைகள், வளையல்கள், பாதணிகள் , காலுறைகள், மோதிரங்கள், தாயத்துகள், நாணயக் குற்றிகள் உள்ளிட்ட தனிப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அகழ்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சுமார் 26 ஆண்டுகளுக்குப் பின்னர், 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் புதிய தகனசாலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் இடம்பெற்றபோது மனித எச்சங்கள் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ், நீதிமன்றக் கண்காணிப்புடன் முறையான அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இந்த இடம் தொடர்பில் உண்மை கண்டறியும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வுகளில் சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் உள்ளிட்ட பலருடைய மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அகழ்வுப் பணிகள் சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் தொல்பொருள் நிபுணர்கள், குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மற்றும் ஏனைய துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடன் நீதிமன்றக் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டன.

செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட 583 மனித என்புக்கூடுகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை அடையாளம் காண்பது, மரணத்திற்கான காரணங்களை ஆராய்வது மற்றும் சாத்தியமானால் காணாமல்போனவர்களின் குடும்பங்களுடன் தொடர்புபடுத்துவது அடுத்த கட்ட முக்கிய நடவடிக்கைகளாக அமைகின்றன.

மனித எச்சங்களை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்வதுடன், தேவையான இடங்களில் மரபணு பரிசோதனைகள் உள்ளிட்ட தடயவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்