அபார்ட்மெண்ட் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, இரண்டு குழந்தைகள் உட்பட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பார்லிமென்ட் மற்றும் புளூர் (Parliament and Bloor) வீதிகளுக்கு அருகில் இருந்து CP24 இன் கோர்ட்னி ஹீல் (Courtney Heel) தெரிவிக்கிறார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை சென் ஜேம்ஸ் டவுனில் உள்ள அபார்ட்மெண்ட் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பார்லிமென்ட் மற்றும் புளூர் வீதிகளுக்கு அருகே உள்ள ஒன்டாரியோ வீதியில் (Ontario Street) அமைந்துள்ள உயர்மாடி கட்டிடத்தில் அதிகாலை 3 மணிக்குப் பிறகு இந்த தீ விபத்து ஏற்பட்டது.
தீ விரைவாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், புகையைச் சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட சிலருக்குச் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் ரொறன்ரோ தீயணைப்புத் துறை (Toronto Fire) தெரிவித்துள்ளது.
கட்டிடத்தின் குடியிருப்பாளர்கள் நால்வர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று நம்பப்படுகிறது.
இந்தத் தீ விபத்தினால் எத்தனை பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.