தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் சுரேஸ்சாலேயின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்காதது ஏன் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் எதிர்வரும் 22ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்கவேண்டும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிக்கையை கோரியிருந்த போதிலும் அறிக்கை சமர்ப்பிக்கப்படாத நிலையிலேயே இந்த அழைப்பாணையை நீதிமன்றம் விடுத்துள்ளது.
ஐந்துபேர் கொண்ட மருத்துவ சபை கோரிய அறிக்கையை ஏன் கொழும்பு தேசிய மருத்துவமனை சமர்ப்பிக்கவில்லை எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த செப்டம்பர் 2 ஆம் திகதி நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட போதிலும், குறித்த மருத்துவ அறிக்கைகள் இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், ஐந்து பேர்கொண்ட மருத்துவக் குழுவினால் (Medical Board) கோரப்பட்ட அறிக்கைகள் அந்த மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்படாததற்கான காரணத்தையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்குமாறு மருத்துவமனை இயக்குநருக்கு நீதவான் மேலதிக உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.