2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ்சாலேயை மேலும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக புதிய 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2019 தாக்குதல்களுக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து விசாரணைகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு இந்த புதிய தடுப்புக்காவல் உத்தரவுவழிசெய்கின்றது.
சுரேஸ் சாலேயின் தாயாரும் மனைவியும் தடுப்புக்காவலை நீடிக்கவேண்டாம் என ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.